பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு நூலகங்கள் I 25. இங்கு வருகின்றன. இங்குள்ள இராணுவ நாட்டுப் படப் பிரிவில், 20 இலட்சம் நாட்டுப் படங்களும் இலட்சத்திற் கும் அதிகமான நூல்களும் துண்டு வெளியீடுகளும் உள்ளன. வாணிகத் துறைக் குச் சொந்தமான நூலகங்கள் பல. இதன் வானிலைப் பிரிவில், வானிலை பற்றி உலகிலேயே அதிகமான நூல்களிருக்கின்றன. பல்வேறு தொழில் நுட்பத் துறை களுக்கு உதவுவதற்காகச் சிறந்த நூலகவசதிகளமைந்த ஆய்வுக் கூடங்கள் நாடெங்கிலும் நிறுவப்பட்டிருக்கின்றன. கோல ரோடோ மாகாணத்தில் போல்டரில் (Boulder) உள்ள ஆய்வுக்கூட நூலகம், சயன மண்டல ஆராய்ச்சி, வெளி மண்டல. வானவெளிப் பெளதீகம், வானெலி, பொறியியல் ஆகிய துறைகளில் சிறப்பு வாய்ந்தாக விளங்குகிறது. வா விங்டனிலுள்ள தேசிய வானவெளி ஆய்வு நிருவாக .* sy, alou & #96 (National Aeronautics and space administration) இருக்கும் நூலகம் அண்மையில் நிறுவப்பட்ட தெனினும் மிகப்பெரியது. கடற்படை வானியல் ஆய்வுக் கூட நூலகத்தில் நூற்பட்டியிட்ட 55,000 நூல்கள் உள்ளன. இவற்றுள் கிடைத்தற்கரிய நூல்கள் சிலவும் இருக்கின்றன. கடற்படையின் ஆராய்ச்சிக்கூடத்தின் மிகப் பெரிய நூலகத்தை ஒரு பெண் உருவாக்கினர் என்பது வியக்கத்தக்க செய்தியாகும். இப்படியாக மத்திய அர சாங்க நூலகங்கள் பலப்பல உள்ளன. இவற்றில் பெரும் பாலானவை சில குறிப்பிட்ட துறைகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றன. இராணுவ நூலகங்கள் போன்ற மற்ற நூலகங்கள் பொதுவான இயல்புகளுடன் ஏறத்தாழப் பொது நூலகங்களைப் போல் அமைந்திருக்கின்றன. முதி Quirit flobairro, logo.55 aldàor (Veterans Administration llopital) யைச் சேர்ந்த நூலகங்கள், அரசாங்க நூலகங் _ளின் தனிப்பெருந் தொகுதியாகும். முப்படைகளைச் சொந்த நூலகங்கள், இராணுவ அதிகாரிகள், வீரர்கள், அவரிகளின குடும்பத்தினர் ஆகியோருக்கு மட்டுமே பயன் படுவன: அமைப்பில் பொது நூலகங்கள் போல்வன.