உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

且置f நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் மற்ற அரசாங்க நிறுவனங்களில் முதலில் நினைவுக்கு வருவது அமெரிக்கத் தகவல் நிறுவனம் (U.S. 1. Agency) ஆகும். பல ஆண்டுகளாக வெளிநாடுகளின் தலைநகர்களி லும் மற்ற முக்கிய தகர்களிலும் நூலகங்களை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இவற்றில் சில நூலகங்களை அமெரிக் காவும், அவை இயங்கிவரும் நாடும் கூட்டாக நடத்து கின்றன. அமெரிக்க வாழ்க்கை முறை பற்றிய உண்மை களை எடுத்துக் கூறும் நூல்களும், பிற பொருள்களும் அந்தந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்கும்படி செய்வதே அமெரிக்கத் தகவல் நிறுவன நூலகங்களின் தலையாய நோக்கமாகும். அந்தந்த நாடுகளிலுள்ள அறிஞர்களும், படித்தவர்களும்.அனைத்து நாட்டு மனப்பான்மை கொண்ட வர்களும், புதிய தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த நூலகங்களைப் பெரும் அளவில் பயன்படுத்தி வருகிரு.ர்கள். மக்களாட்சி முறை அரசாங் கத்தை எதிர்ப்பவர்கள் கூட இந்நூலகங்களே அதிகமாகப் பயன்படுத்திக் கொள்கிருர்கள். -