உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 3. மாநில நூலகத்துறையின் தலைவர் நூலக இயல் கல்வியும் அனுபவமும் பெற்றவராக இருப்பதோடு, அவரே மாநிலத் தலைமை நூலகராகவும் இருக்க வேண்டும்: 4. மாவட்டங்களில் கிளை நூலகங்களைப் பெருவாரி யாக ஏற்படுத்திச் சரியான சேவை நடக்காததை நிறுத்த வேண்டும்; 5. இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து மாநிலப் பொது நூலகச் சட்டத்தைத் திருத்தி அமைக்கவேண்டும். ஏற்கெனவே ஆந்திரப் பிரதேசத்திலும் ைம சூ ர் மாநிலத்திலும் நான் கேட்டுக்கொண்டபடி, இந்தச் சீர் திருத்தங்களை எல்லாம் செய்து இருக்கிரு.ர்கள். மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருந்த தமிழ் நாடு இப்பொழுது பின்தங்குவது தவறு. இந்த விஷயத்தை தமது அரசாங்கத்தார்-முக்கியமாகக் கல்வி அமைச்சர்கவனிக்க வேண்டும். திரு. காமராஜ் முதல் அமைச்சராக வும், திரு. சுப்பிரமணியம் கல்வி அமைச்சராகவும் இருந்த நாள் முதல் இதை நான் அமைச்சர்களிடம் அடிக்கடி வற் புறுத்தி வருகிறேன். 1957-ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் நூல் நிலையத் திறப்பு விழா நடந்த பொழுது இப்பொழுது முதல் அமைச்சராக இருக்கும் திரு. அண்ணு துரையிடமும் இதைச் சொல்லியிருக்கிறேன் 6. கல்லூரி நூலகர் ஊதியம் இப்பொழுது அரசாங்கத்தால் அமுலுக்குக் கொண்டு வரப்படும் மற்ருெரு விஷயமும் இந்த நூலில் குறிக்கப்பட்டு உள்ளது. அது கல்லூரி நூலகர்களின் ஊதியத்தைப் பற்றியது. 1958-ஆம் ஆண்டில் பல்கலைக் கழக மானியக் குழுவிஞல் என் தலைமையில் நியமிக்கப்பட்ட நூலகக்குழு, சாதாரண கல்லூரி நூலகர்களுக்குக் கல்லூரி விரிவுரை யாளர் ஊதியமும், பெரிய கல்லூரி நூலகருக்கு துனைப் பேராசிரியர் ஊதியமும் கொடுக்கவேண்டும் என்று சொன்