பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1: ...; நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் பட்ட போது, அது இம்மாநகரில் காணுதற்கரிய அதிசயங் களில் ஒன்ருக அமைந்தது. அமெரிக்காவில் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் கட்டிடக்கலை வரலாற்றிலேயே ஒரு திருப்பு மூனையை ஏற்படுத்திய மாபெரும் சாதனையாக இக் கட்டிடம் இன்றும் மதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டி டத்திற்கான சலவைக் கற்களை, கிரீஸ், இத்தாலி பிரான்சு. செர்மனி, பெல்சியம் முதலிய அயல் நாடுகளிலிருந்து வர வழைத்தார்களாம்! இதைக் கட்டி முடிப்பதற்கு மொத்தம் 90,02,523 டாலர் செலவாகியது. நூலகத்தில், படிப்பதற்கான பொது அறையுடன் (Main Reading Room) 18 89 sou -oxosposit (@tourroups 21 அறைகள்) கட்டப்பட்டன. ஆராய்ச்சிகள் நடத்துவோரி தனியாக அமர்ந்து அமைதியாகப் படிப்பதற்கு இவ்வறை கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆய்வு உதவிப் பிரிவில் (Referபேce Section) நூல்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக உயர்த்த அறப்பணி நிறுவனப் பொறுப்பாளர்கள் குழு வினர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த எண்ணிக்கை, பழைய மூன்று நூலகங்களிலிருந்த நூல்களின் மொத்த எண்ணிக்கையைப் போல் மூன்று மடங்காகும். 80 கிளை நூலகங்கள் புதிய தலைமைக் கட்டிடத்தில் பொது துரலகம் சீராக இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில். 1901-ஆம் ஆண்டு மார்ச் 13.இல் நூலகத்தின் இயக்குநர் டாக்டர். பில்லின் கக்கு ஆண்ட்ரூ கார்னிகி (Andrew Carnegie) என்ற பெருஞ் செல்வந்தரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. "நியுயார்க் பொது நூலகத்தின் சேவையை நகரின் எல்லாப் பகுதி மக்க ளும் பெற வேண்டுமெனில், பெருநகர் முழுவதிலும் பொது நூலகத்தின் கிளை நூலகங்களை அமைத்தல் இன்றியமை பாததாகும். மத்திய நூலகத்திற்குச் செப்தது போன்று. நகரின் ஒவ்வொரு பகுதியிலும் கிளை நூலகத்திற்காக இடம் ஒதுக்கி, கட்டிடம் கட்டியபின் அக் கட்டிடத்தைக் காக்