பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 45 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் 1886-இல் இந்நூலகம் திறக்கப்பட்ட நாளிலிருந்து, இது நாள் வரையிலும் 12,50,00,000 நூல்களை வாசகர்கள் வாங்கிச் சென்றிருக்கிரு.ர்கள். சென்ற 15 ஆண்டுகளில் மட்டும் 50,00,000 கேள்விகளுக்கு இந்நூலகம் பதிலனுப்பி இருக்கிறது. சிறந்த முறையில் அறிவுத் தொண்டாற்றி வரும் இந்த நூலகத்தின் 75-ஆம் ஆண்டு விழா அண்மை யில் கொண்டாடப்பட்டது. *மனித னின் அறிவை வளர்த்து, ஆற்றலைப் பெருக்கி, சிந்தனையைத் துாண்டு வதே’ அன்றும் இன்றும் இந் நூலகத்தின் குறிக்கோளாக இருந்து வருகிறது. இணையற்ற பரிசு 1870 ஆம் ஆண்டின் இறுதியில் ஓர் நாள். பால்டிமோரி நகரில் வாணிகத்தின் மூலம் பெரும்பொருள் குவித்துப் பெருஞ் செல்வந்தராக விளங்கிய ஈளுக் பிராட் என்பார். நகரப் பிரமுகர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கை யில் திடீரென ஒரு விஞவை எழுப்பினர்: இந்நகரத்திற்கு அளிக்கத் தகுந்த மிகச் சிறந்த பரிசு எது?’ என்ன பதில் சொல்வது என்று நண்பர் தயங்கிக் கொண்டிருந்த நேரத் தில், பிராட் தன் கேள்விக்கு தானே விடையும் கூறிஞர்: 'நானே சொல்கிறேன். ஏழை-பணக்காரர் என்ற பேதமின்றி, கறுப்பர்-வெள்ளையர் என்ற பாகுபாடின்றி. நகரின் குடி மக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய இல வசப் பொது நூலகம் ஒன்றுதான் இந்நகரின் இன்றைய இன்றியமையாத தேவை. இதுதான் இணையற்ற பரிசும் ஆகும். இப்பரிசை இந்நகருக்கு நானே வழங்குவேன்." பொருளும் அருளும் கொண்ட பிராட், தமது எண் னத்தைச் செயலாக்கும் பணியிலும் இறங்கிளு1. நூலகத் தின் அமைப்பு. கட்டிடங்கள், சேகரிக்க வேண்டிய நூல்கள் ஆகியவை பற்றிய திட்டங்களை வகுத்தார். தனது நூலகம், ஒரு சிலருக்கு மட்டும் உதவும் வகையில் இருக்கக்கூடாது என்பதில் அவர் மிகவும் அக்கறை காட்டினர். நகரி