உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 50 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் முடிந்தது. 1908-க்கும் 1923-க்கு மிடைப்பட்ட ஆண்டு களில் இந்நூலகங்கள் நிறுவப்பட்டன. பொற்காலம் 1888-இல், பிராட் நூலகம் இயங்கத் தொடங்கிய முத லாண்டிலேயே பால்டிமோர் நகரவாசிகளில் 26,000 பேர். 1,00,000 நூல்களை வாங்கிப் படித்தார்கள். அல் வாண்டில், நூலகத்தில் 45,000 நூல்கள் புதிதாகச் சேர்க் கப் பட்டன. பெயர் பெற்ற மருத்துவரும், அறிஞரும். கல்வியாளருமான டாக்டர். லெவிஸ் ஹென்றி ஸ்டெய்னர் (Lewis Henry Steiner) for co-o:55& opæcurrous disto'" ராகப் பணியாற்றிஞர். அவரும், அவரது உதவியாளரான சார்லஸ் ஈவான்ஸ் (Charles Evans) என்பவரும்தான், ஒரே ஆண்டில் இவ்வளவு நூல்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக இருந்தார்கள். இவ்வளவு நூல்களையும். தாங்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடவில்லை. ஒவ் வொரு நூலையும் நன்கு படித்து, அதன் தராதரத்தை ஆராய்ந்து, வாசகர்களுக்கு அது பயன்படும் என்று திட்ட மாக முடிவு செய்த பிறகுதான் நூல்களை வாங்கிளுேம்' என்று ஸ்டெய்னர் கூறியிருக்கிருர், நூல் சேகரிப்பில் ஸ்டெய்னர் தனிக்கவனம் செலுத்தினர். மற்ற நூலகர் களுடன் கலந்தாலோசித்து, அவர்கள் கூறிய நல்ல கருத் துக்களின்படி அவர் செய்த மதிநுட்பமான மாறுதல்கள் நூலக நிருவாகம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் காரணமாக இருந்தன. 1892-இல் டாக்டர். ஸ்டெய்னர் காலமானர். அவருக் குப் பிறகு, அவரது மகன் டாக்டர். பெர்னர்டு கிறிஸ்டியன் ஸ்டெய்னர் என்ற 25 வயது இளைஞர் பிராட் நூலகத்தின் நூலகராளுர். அவரது நிருவாகத்தில், பல புதிய சேவைப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. குழந்தை இலக்கியங்களே யும், கல்வி, தொழில் நுட்பம், நுண்கலை பற்றிய நூல்களே யும் அவர் ஏராளமாக வாங்கிச் சேர்த்தார். அமெரிக்க