பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் படுகிறது. ஈளுக் பிராட் அறநிதியிலிருந்து ஆண்டுதோறும் 50 000 டாலர் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. மேரிலாந்து மாநிலத்தின் அரசாங்கத்திடமிருந்தும் பிராட் நூலகம் ஒரளவு பணம் பெறுகிறது. இந்நூலகத்திற்கென நிறுவப்பட்டுள்ள வேறு சில சிறுசிறு அறநிதிகளிலிருந்தும் குறிப்பிட்ட அளவுக்கு வருமானம் வருகிறது. இந்த வரு மானம், நூலகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் பராமரிப் புக்கும் போதுமானதாகவே இருக்கிறது. அப்படி ஏதாவது பனப்பற்ருக் குறை ஏற்படுமாயின், நகராட்சி மன்றத் திடம் நூலகம் பணம் கோருகிறது. நகாரட்சி மன்றம், இதற்கு மக்கள் ஒப்புதல் பெறுவதற்காக தனித் தேர்தல் நடத்துகிறது. நூலகத்தின் கோரிக்கையைப் பொதுமக்கள் பேராதரவுடன் ஏற்றுக்கொள்கின்றனர்.நூலகத்தின் நிதிக் கோரிக்கைக்காக இதுவரை நடந்த எந்தத் தேர்தலிலும், கோரிக்கை மறுக்கப்பட்டதில்லை. பிராட் நூலகம், பால்டிமோர் நகரமக்களுக்கு எந்த அளவுக்கு அரும்பணி யாற்றி வருகிறது என்பதற்கும், இந்நூலகத்தின் மீது மக்கள் எவ்வளவு உயர்ந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கி ரு.ர்கள் என்பதற்கு இதுவே தக்க சான்று. .ே ஹார்வடு பல் கலைக் கழக நூலகம் அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழக நூலகங்களிலெல் லாம் மிகப் பெரியது ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகமா கும். ஹார்வர்டுக் கல்லூரி நூலகம், பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமாகவே இயங்கி வருகிறது. நூலகம் என்பது ஒரு கல்வி நிறுவனத்தின் இன்றியமை யாத ஒசி உறுப்பு: ஏன், இருதயம் என்றே சொல்லலாம் ஏனெனில், கல்வி நிறுவனத்தின் வலிவும், திறமையும், ஆக் கப் பணித்திறனும், இடையருத வளர்ச்சியும் அதன் நால கத்தையே பொறுத்திருக்கிறது. நூலகம். மாபெரும் அறிவுக் களஞ்சியம். முற்போக்கான மாறுதல்களுக்கு நூல