பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 5 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் பான தகவல்களை எந்த நூலிலிருந்து பெறலாம் என்பதை பும் அவர்கள் கூறுவார்கள். வைடனர் கட்டிடத்திலுள்ள தலைமைப் படிப்பறையில் ஆய்வு உதவி நூல்கள் உள்ளன. இவை பிரிவு பிரிவாகப் பகுத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. படிப்பறையில் கிழக்குக்கோடியில் பொது நூல் விவரத் தொகுதியும் 'நியுயார்க் டைம்ஸ் நாளிதழின் பொருட் பட்டியும், ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பட்டியலும் இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக கல்வி, வாழ்க்கை வரலாறு பம் றிய நூல்கள், பல்வேறு மொழிகளிலுள்ள பொதுக் கலக் களஞ்சியங்கள், பல்வேறு மொழிகளிலுள்ள அகராதிகள் முதலியன பிரிவு பிரிவாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொது ஆய்வு உதவி நூல்களுக்கு அடுத்தபடியாக, கலை, இலக்கியம், வாலாறு. பூகோளம், விஞ்ஞானம், சமயம், புள்ளிவிவரம், அரசியல் முதலான சிறப்புப் பொருள் வாரி யாக நூல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்கள் தங் களுக்குத் தேவையான தகவல்களே எளிதாகவும், விரைவா கவும், அல்லது துல்லியமாகவும் தெரித்து கொள்வதற்கும் உதவும் வகையில் ஆய்வு உதவி நூலகத்தில் எல்லா வசதி களும் செய்யப்பட்டிருக்கின்றன. அரசாங்க ஆவணக் காப்பிடம் அமெரிக்க அரசாங்க ஆவணங்களின் (Documents) காப்பிடமாகவும் (Depository) ஹார்வர்டு நூலகம் பணி யாற்றி வருகிறது. எனவே, அரசாங்கத்தின் எல்லாச் சான்றுகளும், பத்திரங்களும் இங்கு வருகின்றன. பாராளு மன்ற நடவடிக்கை அறிக்கைகள், பாராளுமன்ற ஆய்வுக் குழுக்களின் அறிக் கைகள், சட்டங்கள், மசோதாக்கள் அனைத்தின் படிகளும் இந்நூலகத்திற்கு வருகின்றன. இவை இந்நூலகத்தின் ஒரு பகுதியாக பொருள்வாரியாக வைக் கப்பட்டிருக்கின்றன. வாசகர்கள் இவற்றையும் குறிப் பெடுக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.