உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 5 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் மருத்தவம் பற்றிய 40 பிரிவுகளைச் சார்ந்த எல்லா நூல் களையும் இந்நூலகம் சேகரிக்கிறது. இரசாயனம், பெளதி கம். உடல் உட்கூறு இயல் (Biology), தாவர இயல், உளவியல், கருவி இபல் (Instrumentation) ஆகிய பொது விஞ்ஞானப் பிரிவுகள் குறித்த நால்களையும் இந்நூலகம் ஒரளவுக்கு சேகரிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 90 000 நூல்கள் வீதத்தில் இந்நூலகத்திற்குப் புதிய நூல்கள் வாங்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு உதவி உள் தாட்டிலும், வெளி நாட்டிலும் உள்ள எல்லா நூலகங்களுக்கும் உதவியாக நாட்டுத் தலைமை மருத்துவ நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகத்திற்கு நூலகம் a-si alib gi ... l-th (Inter Library Loan Programe) iPeirs"p இந்நூலகம் நிறைவேற்றி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் உள்ள எந்த நூலக மாவது தனக்குக் கிடைக்காத பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளின் நகல்களை அனுப்பி வைக்கும்படி வேண்டி ஞல், இந்நூலகம் உடன்ே அக்கட்டுரைகளின் புகைப்பட நகல்களை (Photo Copies) எடுத்து அனுப்புகிறது. இந்தச் சேவைக்குக் கட்டணம் எதையும் இந்நூலகம் வசூலிப்ப தில்லை. புகைப்பட நகல்களைக் கேட்கும் நூலகம் தேவைப் படுமானல் அவற்றை நிரந்தரமாக வைத்துக் கொள்லாம் இத்தகைய நகல்களை விரும்பும் அனுமதி பெற்ற நூல கங்கள், தங்கள் கோரிக்கைகளையும், தங்களுக்குத் தேவை யான கட்டுரைகளின் விரிவான விவரங்களையும் குறிப்பிட்ட அச்சடித்த விண்ணப்பத் தாள்களில் (Forms) குறிப்பிட்டு தாட்டுத் தலைமை மருத்துவ நூலகத்திற்கு அனுப்புதல் வேண்டும். இவ்விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் கூடிய விரைவி. புகைப்பட நகல்கள் அனுப்பப்படுகின்றன. இது தவிர, அமெரிக்க நூலகங்களுக்கு அந்தந்த பத்திரிகை களின் தொகுப்புகளை வழங்கியும் இந்நூலகம் உதவுகிறது.