பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் 137 உலகின் மிகப் பெரிய உடலியல்-மருத்துவ நூலகம் என்ற முறையில், உலகம் முழுவதும் வெளியாகியுள்ள, வெளியாகிவரும் மருத்துவம், உடல் உட்கூறு, இயல் (Biology) ஆகியவை தொடர்பான நூல்கள் அனைத்தையும் அலசி. ஆராய்ந்து பகுத்து, வகுத்து, பொருள்வாரியாக வகைப்படுத்தும் (Indexing) மாபெரும் பொறுப்பையும் இந்நூலகம் மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இப் பணியைச் செய்துவரும் ஒரே நிறுவனம் இதுதான். இந்த நூல்கள் எல்லாம் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில், நூல் விவரத் தொகுதிகளை இந் நூலகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. மருத்துவ இலக் கியங்கள் பெருவாரியாகப் பெருகிவிட்ட காரணத்தால் மருத்துவ இலக்கியங்களை அலசி ஆராய்வதில் தனிப் பயிற்சி பும், திறமையும் பெற்ற மற்ற அறிஞர்களின் ஒத்துழைப் Gurr Gih, ustaš, *rr:#35 orrst, so # @sir (Electronic Computer) உதவி கொண்டும் நூல் பகுப்புப் பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் ஆய்வு வல்லுநர்கள் (Analysts) ஆழ்ந்து படித்து ஆராய்ந்து, அதை எந்தப் பொருள் வரிசை யில் (Index) சேர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிருர் கள். அவர்கள் தெரிவித்த தகவல்களை (Data) நாடாக்களில் (tapes) பதிவு செய்து, மின்காந்தக் கருவியினுள் (Computer) செலுத்திக் காந்த நாடாக்களாக (Magnetic tapes) உரு மாற்றுகிருர்கள். இதன் மூலம் இவற்றைப் பாதுகாத்து வைப்பது எளிதாகிறது. இந்நாடாச் சுருள் (reel) ஒவ் வொன்றும் சுமார் 12 அங்குல விட்டம் உள்ளது. ஒரு சுருளில் சுமார் 35000 நூல்களின் விவரங்களைப் பதிவு செய்து வைக்க முடியும், இந்நூலகத்தின் மருத்துவ இலக்கிய ஆய்வு.சேகரிப்புப் off off (Medical Literature Analysis and Retrieval System-MEDLARS) உலகெங்கிலுமிருந்து வெளியாகும் 2,400 மருத்துவப் பத்திரிகைகளைப் படித்து அதிலுள்ள கட்டுகளை அலசி ஆராய்ந்து, பொருள்வாரியாகப் பிரித்து, தொகுத்து,