உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 8 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் மாதந்தோறும் பொருள்-ஆசிரியர் வாரியாகக் கட்டுரை களின் வரிசையைத் (Index) தயாரிக்கிரு.ர்கள். இவ்விதம் தொகுக்கப்படும் கட்டுரைகளில் 75 சதவிகிதம் வெளி நாடு களிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் வெளியானவை. இத்தொகுப்புகளைப் பெரும் அளவில் அச்சிட்டு விற்பனை யும் செய்கிரு.ர்கள். அவ்வப்போது நூல் விவரத் தொகுதிகளை (Recurring Bibliographies) வெளியிடுவதும் இந்தப் பிரிவின் மற் ருெரு பணியாகும். புற்று நோய், இருதய நோய், மனநோய் ஆகிய துறைகளில் நடைபெறும் நுண் ஆராய்ச்சிகள், புதிய மருந்துகள் பற்றி அண்மையில் வெளியான அறிக்கைகள் ஆகியவற்றைப் பொருள் வாரியாகத் தொகுத்து அதற் கான நூல் விவரத் தொகுதிகளை இடைவிட்டு இடைவிட்டு இந்தப் பிரிவினர் வெளியிட்டு வருகிருர்கள். அந்தத் துறையில் பணியாற்றும் வல்லுநகர்களுக்கும் நிறுவனங் களுக்கும் இத் தொகுதிகள் பேருதவியாக இருக்கின்றன. மருத்துவ நூல்களைப் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் மின்காந்தக் கருவிகளிளுல் கண்டு பிடிக்கும் வகையில் எந்திரங்களினல் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ஆய்வு உதவி நூல்களை நாடி வருபவர்கள் தங்களுக் குத் தேவையான நூலைத் தேடி எடுப்பதற்குள் பல விதமான நூலக நூற் பட்டிகளையும், நூல் விவரத் தொகுதிகளையும், பொருள் வரிசைகளையும் பார்க்க வேண் டியதிருக்கிறது. இந்த வேலையை எளிதில் முடிப்பதற்கு எந்திர முறை பயன்படுகிறது. நூல் விவரங்களை எந்திர முறையில் தொகுப்பதற்கு இதுவே காரணம். 1969-ஆம் ஆண்டில் சுமார் 10 இலட்சம் நூல்களின் விவரங்கள் இங்கு எந்திர முறைப்படி தொகுத்து வைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் காந்தக் கருவிகளில் தொகுத்து வைக்கப்பட்டிருக் கும் தகவல்களே இருவித முறைகளின் படி அச்சடித்து எடுக்