உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பிற சிறப்புக்கள் நூலகவியல் கல்வி நூலகத் துறையில் முன்னணியில் நிற்கும் அமெரிக்கா வில் நூலகவியல் கல்வி உயர்ந்த நிலையில் விளங்குவதில் வியப்பில்லை. பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற் கல்வியைப் போலவே நூலகவியலும் தொழிற்கல்வியாகக் கற்பிக்கப் படுகின்றது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அகனத்திலும் பட்டப்படிப்பு நிலையிலும், பட்டமேற்படிப்பு நிலையிலும் நூலகவியல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பட்டத்திற்குக் கீழ்ப்பட்ட நிலையிலும் (Undergraduate Level) ஒரு வகுப்பு நடக்கின்றது. இவ்வகுப்பு முக்கியமாக பள்ளி நூலகர்கள், ஆசிரிய-நூலகர்கள் ஆகியோருக்கென நடைபெறுகிறது. சிகாகோ பல்கலைக் கழகத்தில் மட்டும் Gurr $ $ $ ci so syso un Lustsir (General Education System) ஒருதொடர்ச்சியாகவே நூலகவியல் பட்ட வகுப்பு நடத்தப் படுகிறது. நூலகவியல் கல்வி பயிலுவதற்கு வலுவான ஆயத்தக் கல்வியாகவும், உயர்ந்த நிலையில் இத்துறையில் சிறப்பாய்வு (Specialisation) நடத்துவதற்குப் போதிய கால அவகாசம் தரும் வகையிலும் இது அமைந்திருக் கிறது பொதுவாக அமெரிக்காவிலுள்ள நூலகப் பள்ளிகள் ஒன்றுக்கொன்று வேறுப்பட்டனவாகவே உள்ளன. நூல கத் தொழிலின் தனித்தன்மை, நடைமுறை அம்சங்கள் நூ-13