உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I92 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் நாட்டு இலக்கியங்களை மொழி பெயர்த்து வெளியிடுவதும் இப்பிரிவின் பணியாகும். ஆராய்ச்சி-பயிற்சிப் பிரிவு மருத்துவம் பற்றிய தகவல்களை எந்திரங்களில் பதிவு செய்யவும், பதிவான தகவல்களை மீண்டும் தேடி எடுக்கவும் நிபுணர்களுக்கு இப்பிரிவு தனிப்பயிற்சி அளிக்கிறது. நால கம் பற்றிய தகவல் தொடர்பு அலுவல்கள் மேலும் சீராக வம் த ரிதாமகவும் நடைபெறுவதற்கான புதிய வழிமுறை களை ஆராய்ந்து கண்டு பிடிப்பதும் இப்பிரிவின் பணிகளில் ஒன்ரு கும் மருத்துவ நூலகர்கள். மருத்துவ விஞ்ஞானத் தகவல் நிபுணர்கள், தகவல் பகுத் தாய்வு வல்லுநர்கள். மருத் தவ விஞ்ஞான எழுத்தாளர்கள் கட்டுரையாளர்கள் ஆகியோருக்கு அந்தந்தத் துறையில் சிறப்புப்பயிற்சி அளிப் பதற்கு இந்தப் பிரிவு ஏற்பாடு செய்கிறது. இப்பயிற்சிக்கு ஆகும் செலவை இப்பிரிவே ஏற்றுக் கொள்கிறது உலகுக்கு வழிகாட்டி மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாகப் பலதிறப்பட்ட பருவ வெளியீடுகளை வெளியிட்டு வருவது நாட்டுத் தலைமை மருத்துவ நூலகத்தின் தலையாய பணிசளில் ஒன்றெனக் கூறலாம். மருத்துவம் பற்றிய நவீன ஆராய்ச்சி களும், புதிய கண்டுபிடிப்புகளும் உலகமெங்கு முள்ள மக்களுக்கு உடனுக்குடன் தெரிவதற்கு இந்த வெளி பீடுகள் உதவுகின்றன. இதனால் இங்கிருந்து வெளியாகும் வெளியீடுகணை, எல்லா நாடுகளிலுமுள்ள மருத்துவ விஞ் ஞானிகளும், ஆராய்ச்சிக் கூடங்களும், மருத்துவ வல்லுநர் களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் வியப் பேதுமில்லை. உலகில் மிகப் பெரிய இந்த நூலகம், அமெரிக்க மக்களுக்குப் பயனளிப்பதுடன் நில்லாமல், அகில உலக மக்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறது