பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் அந்தந்த நூலகத்தின் தேவைகளுக்கிணங்க, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அலுவலர்களுக்கு. இவர்களிள் சேவை நிரந்தரமாக்கப்படுவதற்கு முந்திய en su é, Edo (Probation Period) உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சில இடங் களில் இந்தக் காலம் ஈராண்டுகள் வரை நீடிக்கிறது. இக் காலத்தில் அலுவலர்களுக்கு நூலகத்தின் எல்லாப் பணி களிலும் ஆழமான பயிற்சியளிக்கப்படுகிறது. நூலகப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நூலகத்தில் எப்படிப் பணியாற்றுகிருர்கள் என்பது குறித்துச் சில நூலகங்கள், அந்த நூலகப்பள்ளிகளுக்கு அறிக்கைகள் அளித்து வருகின் றன. நூலகவியல் கல்வியின் குறைகளே அறிந்து கொள்ள வும் கல்வித்திறனை மேம்படுத்தவும் இந்த அறிக்கைகள் உதவுகின்றன. அமெரிக்காவில் கல்வி புத் தம் புதிய துறைகளையெல் லாம் உள்ளடக்கி அபரிமிதமான முறையில் விரிவடைந்து கொண்டு வருகிறது. கல்வியின் துரிதமான வளர்ச்சி கு ஏற்பக் கல்வி வசதிகளைப் பெருக்க வேண்டியிருக்கிறது. கல்வியில் எந்த ஒரு புதிய துறை தோன் றிஞலும், முன் னேற்றம் ஏற்பட்டாலும் அதற்கான வசதிகளே உடனடி யாகச் செய்து கொடுக்க வேண்டியது நூலகங்களின் முதற் கடமையாகிறது. இந்தக் கடமையை அமெரிக்க நூலகங் கள் மிகவும் விழிப்புடனிருந்து நிறை ைேற்றி வருகின்றன. கல்வித் துறையில் ஏற்படும் புதிய மாறுதல்களின் தேவை களே உடனுக்குடன் அறிந்து அதற்கத்தக்க வசதிகளைச் செய்து, பணிகளை ஆற்றும் வகையில் நூலக அலுவலர் களுக்கு அவ்வப்போது புதிய பயிற்சிகள் அளிக்கப்படுகின் றன. நூலகப் பள்ளிகள். நூலகச் சங்கங்கள் ஆகியவை மாநில நூலக அதிகாரிகளின் உதவியோடு அவ்வப்போது நூலக அலுவலர்களுக்கு மறு பயிற்சி வகுப்புகளையும் கருத் தரங்குகளையும், மகாநாடுகளையும் நடத்தி வருகின்றன. நூலகத் தொழில் நிபுணர்களும் பல்வேறு துறைகளில்