உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் 199 அங்கும் இங்கும் அமெரிக்காவில் நூலகத் துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றங்களை நேரில் கண்டபோது, அந்தத் தரத்தை எட்ட இந்திய நூலகங்கள் என்னென்ன செய்ய வேண்டும்; அதற்கு மக்கள் எவ் வெவ்வாறு பல ஆக்கப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்பன பற்றி என் உன்ளத்தில் எண்ணிப் பார்த்தேன். அந்த நினைவு அலைகளே எனது ஆலோசனைகளாக இங்கு தருவது பொருத்த மெனக் கருதுகின்றேன். 1. பல்கலைக்கழக நூலகங்கள் இந்தியாவில் பல்கலைக் கழக நூலகங்கள் இன்று ஒர ளவுக்கு முன்னேற்றமடைந்திருக்கின்றன என்று சொல்ல லாம். இநநூலகங்கள் இப்பொழுது ஒரு குறிப்பிட்ட கட் டத்தை எட்டியிருக்கின்றன. இனிமேல், இவற்தைத் துரிதமாக விரிவாக்குதல் வேண்டும். கடந்த காலத்தில் பல்கலைக்கழக நூலகங்களின் வளர்ச்சி எந்தெந்தத் திசை களில் ஏற்பட்டு வந்திருக்கின்றது என்பதைத் தீர்மானித் துக் கொண்டு இனிமேல் அவற்றின் முன்னேற்றம் எவ் வெல் வகையில் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கு ஏற்ற கொள்கைத் திட்டங்களை வகுத்துச் செயல் படுத்த வேண்டும். வலிமையற்ற ஒரு தலைமை நூலகத்துடன் (Main Library) பல்வேறு துறைகளில் நூலகங்களே அமைத்து நடத்தி வருவது பழைய முறை. இப்பழைய முறை அதிகச் செலவை உண்டு பண்ணுகிறது. அத்துடன் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உகந்ததாகவும் இல்லை. இதை அமெரிக்கப் பல்கலைககழக நூலகங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. இப்பொழுது ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கும், பொதுக் கல் விக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், அதற் குப் பழைய முறையிலிருந்து மாறுப்பட்ட புதிய நூலக