பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் உண்டு. ஆளுல், அதிகார வர்க்கத்தின் வெற்று ஆதிக்கம் இல்லை. அடிக்கடி நடைபெறும் விவாதங்களும், கூட்டங் களும், மாநாடுகளும் நிருவாகத்திலுள்ள எல்லா அதி காரிகளையும் அலுவலர்களை யும் ஒன்று சேர்க்கின்றன. அவர்கள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி ஒருவரை யொருவர் புரிந்து கொள்வதால், எதை எப்படிச் செய்யவேண்டுமென்பதை எல்லோரும் நன் கறிந்து கொள் கிருர்கள். எனவே எந்த ஒரு அலுவலைத் தொடங்கினுலும் அது எல்லா மட்டங்களிலும் தங்கு தடையின்றி விரைவாக நடந்தேறுகிறது. வீண் கால தாமதம் செய்யும் "சிவப்பு நாடா முறையை அங்கு கான முடிவதில்லை. முக்கியமாகப் பெரிய நிறுவனங்கள், புத்துணர்ச்சியோடும், சேவை மனப் பாங்கோடும் துரித கதியில் செயல்பட்டுவருவதைக் காண வியப்பு மேலிடு கிறது. அமெரிக்காவில் நூலக நிருவாகத்தின் தரமும் திற மையும் உயர்வாக இருப்பது போலவே அதற்கான செல வும் அதிகமாக இருக்கின்றது. ஊதியங்கள் உயர்வாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்தியா வுடன் ஒப்பிடும்பொழுது, அமெரிக்காவில் நூலக நிருவாகச் செலவு 6 முதல் 8 மடங்கு அதிகமாக இருக்கிறது, அதற்கு ஏற்ருற்போல் நிருவாகத்தரம் உயரியதாக உள்ளது. தனிப் பட்ட வர்களின் திறமையும் மிகுதியாகவே இருக்கிறது எளிதாகவுள்ள பல வேலைகளே ஒருவரே கவனிப்பது சாதாரணம். எடுத்துக் காட்டாக, ஒரு மாவட்டம் (County) முழுவதிலும் இயங்கும் ஒரு நூலக ஊர்தியின் பணிகளை ஒருவரே செய்கிரு.ர். இவரே ஊர்தியை ஒட்டுவார். நூலகரும் இவரே. நூல்களை வழங்குவதும் வாங்குவதும், இவர்தான். மற்றும் ஊர்தி நூலகச் சேவையோடு தொடர் புடைய எழுத்து வேலைகள் நுட்பப் பணிகள் இவற்றைக் கவனித்துக் கொள்வதும் இவரே.