பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் 20 of = ----- தக்கது. விரிவுரையாளர் ஒரு சில ஆண்டுகளில் பேராசிரிய ராகலாம். அடுத்த சில ஆண்டுகளில் கல்லூரி முதல்வராக லாம். இவ்வாய்ப்புகளையெல்லாம் பெறமுடியாத நிலையி விருக்கின்ற கல்லூரி நூலகருக்கு இந்த ஒரு சலுகையாவது அளிக்க வேண்டுவது கல்லூரிப் பொறுப்பாளர்கள், அரசி னர் தலையாய கடமையாகும் அண்மையில் தமிழக அரசாங்கம் கல்லூரி ஆசிரியர் களுக்கு ஊதிய உயர்வு கொடுத்துள்ளமையை நாமறி வோம். ஆனல், என்ன காரணத்தினுலோ நூலகரை நமது அரசாங்கம் மறந்துவிட்டது. குறிப்பிடத்தக்க அளவிற்கு அவர்களது ஊதியத்தில் உயர்வு ஒன்று மில்லை. நூலகரை விரிவுரையாளராகக் கொண்டால் விரிவுரையாளரது ஊதி யத்தையும் தகுதியையும் நூலகர் பெறவேண்டும். சொல் லளவில் இருந்தால் மாத்திரம் போதாது. விரிவுரையாள ருக்கு உரிய புதிய ஊதியம் ரூ. 300-25-600 ஆகும். நூல் கருக்குக் கொடுக்கப்பட்டிருப்பது ரூ. 200-10-300 ஆகும். ஆளுல், பல்கலைக்கழகப் பரிந்துரைப்படி இன்று தமிழ் நாட்டில் தனிப்பட்டவர்களால் நடத்தப்படுகின்ற கல்லூரி களில் பணியாற்றுகின்ற நூலகர் பலர் ஏற்கெனவே ரூ. 225.10-275.15.350 என்ற ஊதிய நிலையில் உள்ளனர். புதிய ஊதியத் திட்டத்தை வகுக்கின்றபொழுது ஏற் கெனவே இருக்கின்ற ஊதிய விகிதத்தில் குறைவு ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமையாகும். மேலும் இதுபற்றிப் பல்கலைக் கழகத்தை யும் கலந்தே செய்திருக்க வேண்டும். எனினும் நமது தமிழக அரசு இதனை மீண்டும் ஆராய்ந்து பல்கலைக் கழகத் தையும் கலந்து, பல்கலைக்கழக மானியக்குழு செய்திருக் கின்ற பரிந்துரையினேயும் கருத்திலே கொண்டு உடனடி யாக விரிவுரையாளருக்குக் கொடுக்கப்படுகின்ற ஊதியத் தையே நூலகருக்கும் கொடுக்க ஏற்பாடு செய்யும் என்ற நம்பிக்கையோடு நூலகர்கள் உள்ளனர். மேலும் முதுகலைப் பட்டப் படிப்பு இருக்கின்ற கல்லூரிகளில், முதுகலைப் பட்ட