பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 நூலக நாட்கள் நூற்றிருபது நாட்கள் மும், நூலகவியல் பட்டம் அல்லது டிப்ளமோவும் அல்லது பொதுக் கல்வி இளங்கலைப் பட்டமும் நூலகவியலில் முது கலைப் பட்டமும் பெற்றவர்களையோ, அன்றி பொதுக் கல் விப் பட்டமும் நூலகவியல் பட்டம் அல்லது டிப்ள மோவோவும் பெற்று ஐந்தாண்டு அநுபவம் உடையவர் களே நூலகராக நியமிக்கலாம். அவர்களுக்குத் தலைமை விரிவுரையாளர்களுக்குரிய ஊதிய விகிதம் (ரூ. 400-800) கொடுத்தல் வேண்டும். பொதுக் கல்விப் பட்டமும் நூலக வியலில் குறுகிய காலப்பயிற்சி பெற்றுச் சான்றிதழும் வாங் கியோர் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ 15.0.10.250 என்ற நிலையில் ஊதியம் கொடுக்கலாம். நூலகர் நிலை உயர்ந்தால் நூலகம் உயரும். நூலகம் உயர்ந் தால் கல்லூரியின் கல்வித்தரம் உயரும். கல்வித்தரம் உயர்ந்தால் மக்கள் உயர்வர். அதன் வழியே நாடும் உயரும். 3. ஆய்வு உதவிப் பணி நமது நூலகங்களில் ஆய்வு உதவிப் பணி போதிய அளவில் உருப்பெறவில்லை. மேலும் சிறப்பு ஆராய்ச்சி உதவி நமது நூலகங்களில் அளிக்கப்படுவதே இல்லை. ஒரு சில பல்கலைக்கழக நூலகங்களில் சிறப்பு ஆய்வுப் பணிக்கு என்று ஒரு சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளுல், அவர் கள் வேறு பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். இவ் விரு பணிகளைக் கொண்டு தான் பிறநாடுகளில் நூலகத்தின் தராதரம் மதிக்கப்படு கிறது. எனவே, நம் நாட்டில் இவ்விரு பணிகளையும் உரிய முறையில் வணர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான நிதிவசதிகளும் பயிற்சி வசதிகளும் செய்யப்படவேண்டும். அமெரிக்க நூலகங்களில் ஆராய்ச்சிகளுக்கான உதவிகள் பொருள் வாரியாக மிகவும் சிக்கனமான முறையில் அளிக்கப்பட் டிருக்கின்றன. பெளதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞா