பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் 罗0岳 சனம், மானிடவியல், சமூகவியல் என்பன போன்ற குறிப் பிட்ட பிரிவுகளாக நூலகப்பணிகள் வகுக்கப்பட்டிருப்ப தால் அந்தந்தப் பிரிவுகளுக்கான உதவிகளை எளிதில் பெற முடிகிறது. நூல்களே யும் வாசகர்களையும் நேரடியாக இணைககும் விரும்பிய வண்ணம் படிக்கும் முறை (Open Acess), நூல்களைப் பயன்படுத்துவதில் மிகவும் முக்கிய மான ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற சிறந்த வசதிகளே இந்திய நூலகங்கள் அனைத்திலும் ஏற். படுத்த வேண்டும். 4. தொழில் நுட்ப முறைகள் நூலக நூற்பட்டி தயாரித்தல், நூல்களைப் பகுத்து வகுத்தல், பதிவு செய்தல் முதலியன தொடர்பாக இந்தி யாவில் கையாளப்படும் முறைகள் தரமானவைகளாக இல்லை. இவற்றைவிட எவ்வளவோ உயர்ந்த சிறந்த முறைகள் இப்பொழுது மேலைநாடுகளில் கையாளப்பட்டு வருகின்றன. முககியமாக நூல் வழங்கும் முறைகளும், வழங்கியவைகளைப் பதிவு செய்யும் முறைகளும் மிகவும் பழையவை. இந்தப் பத்தாம்பசலி முறைகளைக் கைவிட்டு நவீன முறைகளைக் கையாள்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் நூலக நிருவாகத்தை ஒரே சீரான தரத் துடன் அமைப்பதறகு இதுவரையில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அண்மைக் காலமாக மூலதனச் செலவுகளுக்கெனப் பல்கலைக் கழகங்களுக்குப் பெரும் அளவில் மானிய நிதிகள் கிடைத்து வருகின்றன. ஆனால், நூலகங்களுக்கெனத் தனியாகப் பெருமளவு நிதி ஒதுக்கப் படுவதில்லை. இந்தியாவின் நிலைமைக் கும் நம் பல்கலைக் கழகங்களின் தேவைக்கும் ஏற்ற முறையில் நூலகத்தரம்' (Standard) ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும்.