பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் 5. தாலகக் கட்டிடம் நூலகக் கட்டிடங்களைப் பொறுத்த வரையில் அமெரிக் காவிடமிருந்து இந்தியா எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டும் அங்கு பெரிய நூலகக் கட்டிடங்கள் ஒலி எதி ரொலிக்காத முறையிலும், எளிதில் விரிவுப்படுத்துவதற்கு உகந்த வகையிலும் கட்டப்படுகின்றன. அவற்றின் மாதிரி யில், உயர அகலங்களே நமது நாட்டு நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்து. நம் நூலகக் கட்டிடங்களையும் நன்கு கட்ட வேண்டும். அமெரிக்க நூலகக் கட்டிடங்களின் உயரம் எட்டு முதல் பத்து அடிவரை அமைந்துள்ளது. அங்கு செயற்கை வெளிச்ச முறையை அமைப்பது எளிதாக இருப்பதால் அவர்கள் உயரத்தைக் குறைவாக அமைத்துக் கொள்கிரு.ர்கள். நம் நாட்டில் இயற்கை வெளிச்சம் தாரா ளமாக உட்புகும் வகையில் பதினு று அடி உயரத்திற்குக் கட்டிடங்களை அமைக்கலாம் இந்தியப் பல்கலைக் கழக நூலகக் கட்டிடங்களில் எங்கெங்கு முடியுமோ அங்கெல் லாம் குளிர் சாதன வசதி (Air-condition) ஏற்படுத்துவது நல்லது. இதற்குச் சற்றுச் செலவானலும், அதனல் விரை வாகச் சிறந்த பலன்கள் ஏற்படுவது உறுதி. அமெரிக்காவில் நூலகக் கட்டிடங்கள் உயரத்தில் சிறியதாக இருந்தாலும் அவை சிக்கனமான முறையிலும் எளிமையோடும் அமைத் திருப்பதுடன் திறமையாக இயங்குவதற்கான எல்லா வசதி களையும் பெற்றிருக்கின்றன. நூலகம் வளரும் தன்மையது. எனவே, நம் நாட்டில் நூலகக் கட்டிடங்களே கட்டுகின்ற போது, நூலகத்தின் வருங்கால வளர்ச்சியினை மனதிலே கொண்டு கட்டிடங்களே அமைத்தல் வேண்டும். அத்துடன் நின்றுவிடாது, வளர்ச்சிக்கு ஏற்ப நாளாவட்டத்தில் கட்டி டத்தை விரிவுபடுத்தவும் வேண்டும். மேலும், பல்கலைக் கழக நூலகங்களிலும், பெரிய கல்லூரி நூலகங்களிலும் பல மணி நேரம் நூலகத்திலிருந்து படித்துப் பயன்பெறுவோர் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு உரிய அறைகளும், ஆராய்ச்சி செய்வோரி தனியாக அமர்ந்து அமைதியாகத்