பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் RO 7 தங்களுடைய ஆய்வினைச் செய்வதற்கு ஏற்ற நிலையில் அமைக்கட்பட்ட தனிப்பகுதிகளும் அமைக்கப் பெறுதல் வேண்டும். இதல்ை சிறந்த பலன்கள் நாட்டிற்கும் மக்க ருக்கும் ஏற்படும். .ே நூலகவியல் கல்வி அமெரிக்க நூலகத்துறையின் தலையாய அங்கமாக அமைந்திருப்பது நூலகவியல் கல்வியாகும். அமெரிக்காவில் 1880இல் எந்த அளவுக்கு நூலகக்கல்வி வசதிகளும், பயிற்சி வசதிகளும் அமைந்திருந்தனவோ அந்த அளவில்தான் நாட்டில் இன் நம் வசதிகள் உள்ளன. நமது பாடத்திட் டங்கள் மிகக் குறுகிய அளவிலேயே உள்ளன. இந்தியாவில் நூலகவியல் கல்வியை ஒழுங்குபடுத்தி அதைச் சாதாரணத் தொழில்திறன் நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்கு உயர்த் தியவர் நூலகவியல் பேரறிஞர் டாக்டர். எஸ். ஆர். ரங்க நாதன் ஆவார். அவருக்கு நாம் என்றென்றும் கடமைப்பட் டுள்ளோம். நூலகவியல் கல்விக்கு அலர் வரையறுத்த தரத் தைக் குறையாமல் நிலை நாட்ட வேண்டுமெனில் இந்தியா வில் நூலகவியல் பள்ளிகள் வளர்வதற்குக் குறைந்த அளவு வசதிகளாவது இருக்கவேண்டும். இதற்கு நூலகவியல்பள்ளி களில் போதிய தகுதி பெற்ற முழுநேர ஆசிரியர்களைப் போதுமான அளவு அமர்த்த வேண்டும். இந்தத் தொழி லில் இறங்கிளுல் நல்ல வாய் புக்கள் இல்லை எனப் பலரும் கருதுவதால் நூலகப் பள்ளிகளில் பயில திறமையானவர் கள் முன் வருவதில்லை. எனவே, இத்தொழிலைக் கவர்ச்சிகர மானதாக ஆக்குவதற்கு ஆவன செய்ய வேண்டும். நூலக வியல் கல்வி பயிலுவோர்க்கு உதவிச் சம்பளங்கள் வழங்க் அரசினர் முன்வர வேண்டும். அதேசமயத்தில் நூலகவியல் கல்விக்கான பாடத்திட்டங்களையும் இக்காலத்தேவைக் கேற்ப மாற்றியமைத்தல் வேண்டும். மேலும், நூலகவியல் பட்டப் படிப்புக்கு வருகின்ற மாணவர்கள் ஏற்கனவே பொதுக் கல்வியில் பட்டம் பெற்றிருப்பதால், ஒராண்டு