உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 F நூலக நாட்டில் துாற்றிருபது நாட்கள் - - --- அவர்கள் இவ்வலுவலர்க்குரிய எல்லாத்தகுதிகளையும் பெற் றிருந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. மாநில நூலக இயக்குநராக இன்று கல்வி இயக்குநரே விளங்குகிருர். ஆனல் பொதுநூலகத் துறை விரிவடைந்து விட்டமையால் நூலகத் துறையில் அனுபவம் பெற்ற நூலக வியல் அறிஞர் ஒருவரை, முழுநேர, ஊதியம் பெறும் மாநில நூலக இயக்குநராக நியமித்தல் நல்ல பலன்களைத் தரும் என்பது வெள்ளிடைமலையாகும். அத்தகைய ஒருவரை உடனடியாக நியமிக்காவிடினும், முதற்படியாக நூலக வியல் கல்வியும், அனுபவம் உடைய ஒருவரை இணை நூலக இயக்குநராக நமது அரசாங்கம் நியமிக்க வேண்டும். அவர் ஒருவர்தான் பொறுப்பாக, முழுநேர ஊழியராகப் பணியாற்ற முடியும். நிதி நிலையில் பற்ருக்குறை ஏற்பட்டுள்ளது என்று முன் னரே குறிப்பிட்டோம். நிதி நிலையினைச் சரிப்படுத்துவதற் குரிய திட்டத்தினையும், அரசாங்கம் உடனடியாக வகுக்க வேண்டும். கிடைக்கின்ற நிதியினை ஆணைக் குழுவினர் மக் களுக்கு உதவும் வண்ணம் நூல்களையும் பருவ வெளியீடுகளை யும் வாங்குவதில் செலவிடுகின்றனரா என்பதையும், நூல கக் கட்டிடம் கட்டுவதிலும், பிற பொருட்கள் வாங்குவதி அலும் செலவிடப்படும் பொருள் ஒழுங்கான முறையில் நன்கு செலவிடப்படுகின்றதா என்பதையும் அரசினர் கவனித்தல் வேண்டும். மேலும் மாநில நூலகக்குழு (State Library Committee) origiãolo. Jalil-to பெறுதல் வேண்டும். அது பெயரளவிற்கு இல்லாமல் நன்கு செயல்படுதல் வேண்டும். நமது கன்னிமாராப் பொது நூலகம், நமது மாநிலத் தலைமை நூலகமாகும். மேலும் இந்திய நாட்டின் தேசிய நூலகங்களில் ஒன்ருகவும் அது இன்று விளங்குகின்றது. சிறந்த நூலகக் கட்டிடம் ஒன்று தற்பொழுது கட்டப்பட்டு வருவதை நாம் அறிவோம். அக் கட்டிடம் விரைவில் முற் மறுப் பெற்ருல் அது அந்நூலகத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும்