உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயான அறுபவம்கள் 22 & - - - போது காலம் ஒரு மணி நேரத்தை விழுங்கியிருந்தது. விமானமும் பம்பாயை அடைந்தது. பம்பாயிலேயே பெரிய விடுதியெனக் கருதப்படும் தாஜ்மகால் ஒட்டலில் விமான நிறுவனத்தினர் செலவிலேயே தங்கி அன்றிரவைக் கழித்தேன். அதிகாலையில் அங்கிருந்து விமான நிலையம் அழைத்துச் சென்ருர்கள். அங்கு, சாமான்கள் சோத8ள விடுதல், சான்றுகள் பரிசீலனை செய்தல் முதலான சடங்கு கள், நடந்தன. இதற்கிடையில் என்ளுேடு அமெரிக்கா விற்கு உடன் வந்த பேராசிரியர் பூரீவத்சவா அவர்களையும் நூலகர் சிங்கர் அவர்களையும் தற்செயலாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவர்களும் அதே விமானத்தில் அமெரிக்கா வருகிருர்கள் என்பதை அறிந்ததும் அளவிலா மகிழ்ச்கியடைந்தேன். நெஞ்சில் குடிகொண்டிருந்த இனத் தெரியாத பயமும் ஒரளவு மறைந்தது. சிறந்த துணை கிடைத்தமைக்காக இறைவனது கருனையைப் போற்றிப் புகழ்ந்தேன். பரிசீலனே முடிந்து வெளியே வந்ததும், இங்கு இன்சூர் செய்யலாம் என்ற வரி பொறித்த பலகை கண் ளிைல் பட்டது. மீண்டும் குடும்பக்கவலே மனதில் குடிகொண் டது. ஏதாவது நிகழ்ந்துவிட்டால் குடும்பத்தின்நிலை என்ன வாகும் என்ற எண்ணம் தலே தாக்கியது. எனவே, ஓடோடி யும் சென்று விபத்துக்காப்பீடு (Accident Insurance) செய்து கொண்டேன். மறுபடியும் மனதில் புதிய தெம்பு குடி யேறியது. பின்னர், நமது இந்திய அரசினர் அனுமதித்த வெளிநாட்டுச் செலவாணியைப் (Foreign Exchange) பெற்றுக் கொண்டேன். இச்சடங்குகளெல்லாம் வரிசையாக முடிந்த பின்னர் நண்பர்களோடு விமானத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டேன். விமானம் புறப்பட்டகால் அனை வரும் இறைவனிடம் இன்னலேதுமில்லாமல் பயணம் இனிதே முடிவுற வேண்டும் என மனமாரப் பிரார்த்தித் துக் கொண்டோம். வழியில் விமானம் சில முக்கிய ஊர் களில் ஒரு சில நிமிடங்கள் நின்றது. ஒவ்வொரு இடத்தி லும் தாங்கள் இறங்கிச் சென்று விமான நிலையத்தில் தங்கி,