உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயாண அனுபவங்கள் 2 & 5 அமெரிக்க வெளி நாட்டுத் துறை அதிகாரிதான் (State Department officer) øyż@*rròs&o 2-G)*$ $ suri srcir பதையறிந்து வியப்புக் கடலில் ஆழ்ந்தேன். முன்பின் அறியாத என்னே அவர் பெயர் சொல்வி அழைத்ததையும், அறிமுகமின்றியே இவர்தான் திருமலைமுத்துசாமியாக இருக்கவேண்டும் என்று உறுதி செய்த அவரது திறனையும் எண்ணி வியந்தேன். பல நாட்கள் பழகியவர் போல் உரிமையோடு நட்பு முறையில் பேசிக்கொண்டே என் கையிலிருந்த பெட்டியை வலிந்து பிடுங்கியவாறே. "வாருங் கள், போகலாம்! நாம் இங்கிருந்து வேருெரு விமான நிலையத்திற்குச் சென்று அங்கு வாசிங்டன் செல்லும் விமானத்தைப் பிடிக்கவேண்டும்!' (Came on let us go! We are going to another airport where you can catch a plane for Washington) ir šrgu Japó) šG*rraior3–*ñisatiitli பகுதிக்கு (Customs) என்ன அழைத்துச் சென்ருர். அங் கிருந்த அதிகாரி புன்னகை புரிந்தபடி மேற் கூறியவாறே அன்பாக வரவேற்புரை கூறியபின், பெயர், சொந்தநாடு அமெரிக்கா வந்ததற்குரிய காரணம், ஆகியவற்றைக் கேட்டறிந்து கொண்டு ஒரிரு நிமிடங்களில் பரிசீலனையை முடித்து வாழ்த்தி அனுப்பினர். அவ்விதமே ஒரு நிமிடத் தில் எனது பயணப் பத்திரமும் (Pass port) பரிசீலிக்கப் பட்டது. சுருங்கக் கூறின் ஏறத்தாழ 15 நிமிடங்களுக்குள் னேயே விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டு விட்டேன். தம் நாட்டில், வெளி நாட்டிலிருந்து கப்பல்கள் வந்தவுடன் பரிசோதனை என்ற பெயரில் பிரயாணிகளைப் பலமணிநேரம் காக்க வைத்துப் படாத பாடு படுத்திவைப்பதைப் பற்றி அடிக்கடிக் கேள்விப்பட்டிருந்த எனக்கு நியுயார்க்கில் இவ் வளவு துரிதமாக இச்சடங்குகளெல்லாம் முடிவடைந்தமை மிகவும் வியப்பாக இருந்தது. காலம் இகழேல்" என்பது சுப்பிரமணிய பாரதியாரின் புதிய ஆத்திசூடி வரியாகும். காலத்தின் அருமையை முழுதும் உணர்ந்து அதனே இக ழாது போற்றி வாழ்கின்ற மக்கள் அமெரிக்க மக்களே நூ-18