பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 துலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் அங்கிருத்த மக்களோடு அளவளாவி மகிழ்ந்தோம். விமா ம்ை குறித்த காலத்தில் சிறிதும் இடையூறின்றிச் சென்றது. எங்களுடைய தற்பேறே என எண்ணி மகிழ்ந்தோம். வழி யெல்லாம் அடிக்கடி சமைத்த காய்கறிகள், ரொட்டி, பிஸ் கட், பழரசம், காப்பி, தேநீர், சிறு அளவு சோறு, முட்டை, பால், இறைச்சி முதலானவற்றை விமானப் பணிவிடைப் பெண்கள் வழங்கி எங்கள் வயிற்றை வாடாமல் பார்த்துக் கொண்டார்கள். அப்பெண்மணிகள் மலர்ந்த முகத்தோ டும், சுறுசுறுப்போடும். கவனத்தோடும் பிரயாணிகளது தேவைகளை யறிந்து அவர்களுக்கு உதவினர். உணவு உரிய நேரத்தில் ஒழுங்காகக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. அன்று என்னுடன் பிரயாணம் செய்தவர்களில் நான் ஒருவனே வீர சைவளுக விளங்கினேன். இறைச்சி, முட்டை ஆகியவற்றை நீக்கி, மதுபானம் எதனையும் தொடாமால், புகை பிடிக்காமல் இருந்த நான் மற்றவர் களுக்கு ஓர் அதிசயப் பொருளாகவே காட்சியளித்தேன். உடன்வந்த நண்பர்கள் இருவரும் செல்லுகின்ற நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் உணவு, உடை, நடையுடை பாவனை அனைத்தையும் மாற்றியமைத்துக் கொள்ள வேண் டும்,என்ற கருத்துக்கொண்டவர்கள். எனவே, விமானத்தில் வழங்கப்பட்ட அனைத்தையும் உண்டும் அருந்தியும் மகிழ்ந் தனர். நியுயார்க் நகரை விமானம் நெருங்கிக் கொண்டிருந்த பொழுது, இந்நகரை அடையவிருக்கின்ருேமே! அங்கு திசை தெரியாது திகைத்து நிற்க வேண்டியது வருமோ என்ற எண்ணம் மனத்தை அலைக்கழித்தது. விமானத்தை விட்டு இறங்கி விமான நிலையத்தில் நுழைந்ததும், வாருங் கள் முத்துசாமி! எங்கள் நாட்டுக்கு உங்களை வரவேற் கிருேம்! உங்கள் வரவு நல்வரவாகுக!' (Hellow, Muthus. warnys you are welcome to our Country! Wish you best அf luckl) என்ற குரல் கேட்டுத் திகைத்து நின்றேன். என் அருகில் மலர்ந்த முகத்தோடு நின்று கொண்டிருந்த