உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.26; நூலக நாட்டில் தாற்றிருபது நாட்கள் என்ருல் அதை யாரும் மறுக்க இயலாது. காலத்தை வீணே கழித்தல் கூடாது. தொடங்குகின்ற பணியை விரைந்து முடிக்க வேண்டும்'-இதுவே அவர்களுடைய முக்கியக் குறிக்கோள். இதுவே அவர்களது வெற்றியின் இரகசியமுமாகும். விரைவு, விரைவு, விரைவு! எங்கும் எதிலும் ஒரே விரைவுதான். எல்லாத் துறையிலும் வேகத் தைத்தான் காண்கிருேம். எனவேதான் அவர்களுடைய நாடு நூறே ஆண்டுகளில் உலகம் வியக்கும் வண்ணம் வளர்ந்தோங்கி விளங்குகின்றது. இன்று அவர்கள் உலக அரங்கிலே முதன்மையாகத் திகழ்வதற்கு அவர்களிடையே இருக்கின்ற விரைவுதான் காரணம். விரைவோடு, எடுத்த பணிகளைச் செம்மையாகச் செய்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வமும் அவர்களிடம் காணப்படுகிறது. இத்தகைய மனப்பான்மை, செயல்திறன், விரைந்து முடிக்கும் ஆற்றல் ஆகியவை நமது இந்திய மக்களுக்கு இன்று அவசியம் தேவைப்படுகின்றன. அமெரிக்கரைப் போன்று, நாமும் காலத்தை 'அவமே போக்காது”, கருத்துடன் எடுத்த காரி யத்தை இடையே நிறுத்தாமல் தொடர்ந்து விரைந்து முடிப்போமால்ை நம் நாடும் ஒரு நாள் உலக அரங்கிலே தலைமையிடத்தைப் பெறும் என்பது திண்னம். பின்னர், அமெரிக்க நண்பர். எங்கள் மூவரையும் தனது ஊர்தியிலேயே அழைத்துச் சென்று, வேருெரு விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த விமானத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தார். நாங்கள் நியுயார்க்கை அடைந்த நேரம் இரவு தொடங்கிய நேரமாகும். ஒளி வெள்ளத்தில் மிதந்த நியுயார்க் நகரம் இந்திரலோகமோ, சந்திர லோ கமோ என்று எண்ணும்படியாகக் காட்சியளித்தது. புராணத்தில் அவை பற்றிப் படித்த நாம், நியுயார்க் நகரை இரவில் காண்கின்றபோது அதனைப் போன்றுதான் அவை யும் விளங்கியிருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எழும். அமெரிக்க நாட்டின் தலைநகரான வாசிங்டனுக்குச் செல்ல ஆயத்தமாக நின்றுகொண்டிருந்த விமானம், நாங்