உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயான அனுபவங்கள் 22 7 _ கள் ஏறிய ஒரு சில நிமிடங்களில் புறப்பட்டது. அதுகால். இரண்டு பீஸ்கட்டுகளும் ஒரு கேக்கும் ஒரு குவளே தேநீரும். கொடுக்கப்பட்டன. அவற்றை நாங்கள் சாப்பிட்டு முடித்த வுடன் விமானம் கீழே இறங்கத் தொடங்கியது. வாசிங் டன் வந்து விட்டது' என்ற அறிவிப்பொலியும் கேட்டது. வாசிங்டன் விமான நிலையத்திலும் வெளி நாட்டுத் துறை உயர் அதிகாரி எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அவரும் முன்னர் கூறியது போன்றே எங்களுக்கு முகமன் உரை கூறி வரவேற்றுத் தனது ஊர்தியிலேயே எங்களுக் காக அமர்த்தப்பட்டிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்ருர், வழியெல்லாம் ஒரே ஒளிமயமாக இருந்தது. ஒளிக்கடலில் நாங்கள் மிதப்பதாகவே நினைத்தோம். நெய்யாவி ஊர்தி யில் சென்றுகொண்டிருக்கும்போதே தலைநகரின் சிறப்பை யெல்லாம் அந்த அமெரிக்க நண்பர், கேட்டார் பிணிக்கும் வண்னாம் அழகாக, ஆணித்தரமாக எடுத்துக் கூறினர். அதிலிருந்து, அவருக்கிருந்த நாட்டுப் பற்றையும் பெரு மிதத்தையும் எங்களால் அறிய முடிந்தது. தனது நாட்டின் சிறப்புக்களை யெல்லாம் வெளிநாட்டினர் அனைவரும் அறிந்து மகிழ வேண்டும் என்று ஒவ்வொரு அமெரிக்கனும் விரும்பு கிருன். எனவே, தனது நாட்டைப் பற்றிய எல்லா விவரங் களையும் நன்கு சேகரித்து வைத்துள்ளான். அயல் நாட்ட வரைக் காண்கின்றபோது, தனது நாட்டைப் பற்றிச் சிறப் புற எடுத்துக் கூற அவாவுகின்ருன். செவ்விய முறையிலே சிறப்புகளே யெல்லாம் விரித்துரைக்கின்ருன், அத்துடன் அவன் நின்று விடுவதில்லை. பிறரைப் பற்றியும், மற்ற நாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ளத்துடிக்கின் முன் அதனல் கேள்விகளைப் போட்டுத் துளைத்தெடுத்து விடுகிருன். பிறரது நற் பண்புகளை யெல்லாம் பாராட்டி மகிழ்கின்ருன். இத்தகைய பண்பைப் பொதுவாக எல்லா அமெரிக்கர்களிடமும் சிறப்பாகப் பெண்களிடமும் காண முடிகிறது. இரண்டு விமான நிலையங்களிலும் நாங்கள் சந்தித்த அமெரிக்க நண்பர்கள் ஒரு சில நிமிடங்களில்