உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப் வந்தது 9 3. டாக்டர் எஸ். ஆர். ரங்கநாத னின் கோலன்' நூல் வகிப்பீடுமுறை. 1. சென்னைப் பொது நூலகச் சட்டம். 5. தமிழில் நாட்டுப் பாடல்கள். 6. தமிழ் இலக்கியமும் பண்பாடும். 7. இந்தியாவில் நூலகக் கல்வி. சுருக்கமாகச் சொன்னல், மேற்கூறிய மூன்று பள்ளி களி லும் நான் கழித்த நாட்களில், அமெரிக்காவில் நூலக வியல் கல்வி வளர்ந்துள்ள அளவைத் தெளிவாக அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் 120 நாட்கள் தங்கியிருந்தேன். அப் பொழுது 6 மாநிலங்களுக்குச்சென்றேன். சுமார் 11 பெரிய நகரங்களைப் பார்த்தேன். வாசிங்டன், இலாஸ் ஏஞ்சல்ஸ், சான் ஒசே, பெர்க்லே, சாக்ரமெண்டோ, பால்டிமோர், சான் பிரான் விஸ்கோ, டென்வர், அர்பான, பாஸ்டன், நியுயார்க் ஆகிய நகரங்கள் குறிப்பிடத்தக்கவை. குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக இடங்களை யாரும் பார்த்ததில்லே என்று எல்லோரும் கூறினர்கள். எனது அமெரிக்க நண்பர் ஒருவர், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தும் கூட, நீங்கள் பார்த்த இடங்கள் சிலவற்றிற்கு நாங்கள் இதுவரைச் சென்றதில்லை. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்தக் கண்டத்தின் பாதிக்குமேல் சுற்றிவிட்டீர் களே! உங்களைப் பார்க்க எனக்குப் பொருமையாய் இருக் கிறது” என்று சொல்லி அதிசயப்பட்டார். இத்தனை இடங் களையும் பார்க்க எனக்கு வாய்ப்பு ஏற்படும் வகையில் அத் தனை திறமையாக வெளிநாட்டுத் துறையினரும், திட்ட இயக்குநர் பேராசிரியர் செய்மூர் லுபெட்ஸ்கியும் எனது பயணத் திட்டத்தை வகுத் திருந்தார்கள்.