உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Տ நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் மேற்கூறிய கருத்தரங்கு எல்லோருக்கும் பொது வானது. அது முடிந்ததும் ஒவ்வொருவருக்கும் தனித் தனித் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இத்திட்டம் வெவ் வேறு இடங்களில் ஏழுவார காலம் நடந்தது. நானும், ராஜஸ்தான் பல்கலைக் கழக நூலகத் துறைத் தலைவர் திரு. ஆனந்த் பி. பூரீவத்சவாவும் கீழ்க்கண்ட மூன்று நூலக வியல் பள்ளிகளில் பணியாற்றி, சிறந்த பயிற்சியினையும் அனுபவத்தையும் பெற்ருேம். 1. நூலகப் பணிப் பள்ளி, கலிபோர்னியாப் பல்கலைக் கழகம், இலாஸ் ஏஞ்சல்ஸ். இந்தப் பள்ளிக்குப் பழ மைச் சிறப்பில்லை. எனினும் இந்நாட்டிலேயே மிகச்சிறந்த நூலகவியல் பள்ளிகளில் ஒன்ருக இது திகழ்கிறது. 2. கலிபோர்னியா மாநிலக் கல்லூரி, சான் ஒசே (San Jose). இங்குப் பள்ளி நூலகர்களுக்கு முக்கிய மாகப் பயிற்சியளிக்கப் படுகிறது. 3. நூகலவியல் பள்ளி, கலிபோர்னியாப் பல்கலைக் கழகம், பெர்க்லே (Berkeley). இது அமெரிக் காவிலேயே மிகத் தொன்மையான, பெயர்பெற்ற நூலகவியல் பள்ளிகளில் ஒன்று. இம்மூன்று இடங்களிலும் பணியாற்றிய நாட்களில் ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் தனித்தனியே விவாதங்கள் நடத்தினேன். சில வகுப்புகளுக்குச் சென் றேன்: கருத்தரங்குகளில் பங்குகொண்டேன். சில வகுப்பு களுக்கு நூற்பட்டியியல் பற்றிப் பாடம் நடத்தினேன். பின் வரும் பொருள்கள் பற்றிச் சொற்பொழிவுகளும் ஆற்றி னேன்: 1. இந்தியாவில் உயர்நிலைக் கல்வி. 2. சென்னைப் பல்கலைக் கழகமும், நூலகவியல் துறையும்.