பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 #3 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் அனுபவம் கிடையாது. ஆனல், தேவிையின் காரணமாக இருவரும் சிறிது சிரமப்பட்டுச் சமைக்கக் கற்றுக்கொண் டோம். இது புதிய அனுபவமே. ஆனால், மின்சாரம் எல் லாவற்றுக்கும் பயன்படுகின்ற காரணத்தாலும், உணவுப் பொருள்கள் அனைத்தும் பக்குவப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் எளிதில் கிடைப்பதாலும் சில நிமிட நேரத்தில் சமையலை முடித்துக்கொள்ள முடிந்தது. சோறு சமைக்க 15 நிமிடங்கள்: சாம்பார் ஆக்க 15 நிமிடங்கள். ஏறத் தாழ 35-40 நிமிடத்திற்குள் ஒரு சிறந்த விருந்தையே நாங்கள் தயாரிக்க முடிந்தது எனலாம். இத்தகைய வசதி கள் நம் நாட்டிலிருந்தால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடை வார்களே. அவர்களது சிரமம் குறையுமே” என்றெல்லாம் எண்ணினேன். இக்கருத்தை நான் அளித்த விருந்திற்கு வந்திருந்த ஒரு அமெரிக்கப் பெண்மணியிடம் கூறியபோது அவர் சிரித்துக்கொண்டே வேடிக்கையாக, நான் உங்கள் நாட்டிற்கு வந்திருக்கிறேன். உங்கள் நாட்டுப் பெண்களில் பலர் தங்கள் காலத்தை வறிதே பேசிக்கழிக்கின்ருர்கள். எனவே, இவ்வசதிகளைப் பெற்ருல் அவர்கள் மேலும் சோம் பேறிகளாகிவிடுவார்கள். வீண் பேச்சிஞலேயே காலத்தை அவர்கள் கழிக்க நேரிடலாம். எங்கள் நாட்டில் நாங்கள் ஆண்களைப் போல் அலுவலகங்களில் பணிபுரிவதோடு விட்டுப் பணிகளையும் செய்கின் ருேம், நாங்கள் நேரத்தைப் பொன்னேபோல் போற்றுகின்ருேம். நேரச்சிக்கனம் அவ சியம் எங்களுக்கு வேண்டும். எனவே, இத்தகைய வசதிகள் எங்களுக்கு இன்றியமையாது தேவைப்படுகின்றன’’ என்று கூறிஞர். ஒருவாரத்தில் சமையற்ககி ஒருவாறு கைவரப் பெற்றேன். அதற்கு என்னுடைய இந்திய நண்பர்களும் ஜப்பான் நாட்டிலிருந்து வந்திருந்த மளுக்கா என்ற நண்ப ரும் சான்று பகர்வர். இந்திய நண்பர்கள் சாம்பாரை அள்ளி அள்ளிக் குடித்து மகிழ்ந்தனர். ஜப்பான் நண்பரோ, -ஓ! முத்துசாமி! உங்கள் சாம்பார் அபாரம். எனக்கு மிக வும் பிடித்திருக்கிறது. அதை எப்படி ஆக்குவது என்று எனக்குத் தயவுசெய்து சொல்லித் தாருங்கள். தாயகம்