பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயாண அனுபவங்கள் 23. I கிடைக்கின்ற கனிகளைப் பொதுமக்கள் அதிக அளவுபெற்று உண்பதற்கு அவர்களது பொளாதாரம் இடந்தருவது மில்லை' என்று பதிலளித்தேன். சமையல் கற்றேன்! தான் வாசிங்டனில் ஏறத்தாழ இருவாரங்கள் தங்கி யிருந்தேன். முதலிரண்டு நாட்களும் பழங்கள், பழரசம், ரொட்டி, பிஸ் கட், உருளைக்கிழங்கு, உப்பு, காரம்போடா மல் அவிக்கப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றையே உண்டு வந்தேன். இருநாட்களும் அரிசிச் சோறு சாப்பிடாதது என்னவோ போலிருந்தது. மனத்தில் ஒர் ஏக்கமே குடி கொண்டுவிட்டது. ஆளுல், இரண்டாம் நாளிரவு வாய்ஸ் ஆப் அமெரிக்கா (Voice of America) அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் திரு. சின்னராஜூம், திரு. அரு ணும் என்னைப் பார்க்க வந்தார்கள். நண்பர் சின்னராஜ் எனது முகக் குறியிலிருந்தே எனது ஏக்கத்தைத் தெரிந்து கோண்டு, நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். எனது வீட்டின் கதவுகள் உங்களுக்காக என்றும் திறந்திருக்கும்' என்று கூறி அத்துடனில்லாது அவரில் லத்திற்கு அன்றே அழைத்துச் சென்று சுவையான தமிழ் நாட்டு உணவை, சிறப்பாகச் சாம்பாரை, வடை பாயசத்துடன் அளித்தார். இவ்வாறே ஒரு சில நாட்கள் அவர்களும் அவர்களது மனை வியாரும் எனக்கு விருந்தளித்தனர். நண்பர் அருண் "அபயம் அளித்தார் என்றே சொல்ல வேண்டும். நான் தனிவீடு (Apartment) எடுத்துள்ளேன். தனியாகவே இருக்கின்றேன். நீங்கள் என்னுடனேயே தங்கலாம். சமைப்பதற்குரிய வசதிகளனைத்தும் இருக்கின்றன. நாமிரு வரும் சமைத்துச் சாப்பிடலாம். ஆளுல், எனக்குச் சமை யல் புதிது’ என்று கூறி அருண் வரவேற்ருர், நான் அதற்கிணங்கி சில நாட்கள் அவருடனேயே தங்கினேன். சில நாட்களில் இரவு மாத்திரம் அங்கு சென்று சமைத்துச் சாப்பிட்டு மகிழ்ந்து திரும்பினேன். எனக்கும் சமையல்