பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 30 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கன் முறையில் உங்கள் நாட்டில் ஒருசிலரால் எங்களைப் பற்றி அவதாருகவும் மிகைப்படுத்தியும் பிரசாரம் செய்யப் பெற்றிருக்கிறது என எண்ணுகிறேன். எங்கள் நாடு சம யத்தை உயிர்போன்று கருதும் நாடு. பசுவினல் எத் தனையோ பலன்களைப் பெறுகின்ருேம். முதியோர்களுக்கும் பாலர்களுக்கும் அது தரும் பால் உணவாகப் பயன்படு கிறது. விவசாயம் நன்கு நடைபெற அதன் வயிற்றி லுதிக் கும் கன்றுகள் துணை செய்கின்றன. அதன் சாணம் எருவா கப் பயன்படுகிறது. சுருங்கச் சொன்னுல் மனிதனுக்குத் தாயைப்போல் பயன்படுவது பசு. தாயை யாராவது கொன்து புசிப்பார்கனா? அது எவ்வளவு பெரிய பாவம்? ஆகவே, பசுவிற்கு எவ்விதத் தீங்கும் செய்யக் கூடாது என்று எண்ணி அதனைப் போற்றிப் பாதுகாப்பதுடன் அன்னேயாக மதித்து வணங்குகிருேம். இவ்வாறே மக்களுக் குப் பயன்படக் கூடிய இயற்கை இந்த செல்வங்கள் அனைத் தையும் போற்றிப் புரக்க வேண்டும் என்று எங்களது சமய நூல்கள் கூறுகின்றன’’ என்று அவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினேன். அவர்களும் பசுவின் பெருமையை இன்றுதான் அறிந்து கொண்டோம்' என்று கூறி நன்றி தெரிவித்துச் சென்றனர். மற்ருெரு நண்பர், "நீங்கள் ஏன் அரிசியை மட்டும். சாப்பிடுகிறீர்கள்? அதளுல்தானே பஞ்சம் ஏற்படுகிறது? எங்களைப் போல் நிறைய ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கனி களே உங்கள் நாட்டவரும் உணவோடு உட்கொண்டால் உங்களுடைய உணவுப் பஞ்சம் தீர்ந்துவிடுமே?' என்று கேட்டார். இதைக் கேட்டதும், உணவில்லாமல் வாடிய மக்களேப் பார்த்து ஒரு மன்னன், ரொட்டி கிடைக்கா விட்டால், கேக் சாப்பிடுங்கள்' என்று சொன்னுளுமே, அந்த நிகழ்ச்சிதான் எனக்கு நினைவுக்கு வந்தது. எனினும் அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே "உங்கள் நாட்டைப் போல எங்கள் நாட்டில் கனிவகைகள் அளவுக்கு மிஞ்சிக் கிடைப்பதுமில்லை. இப்பொழுது