பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயாண அனுபவங்கள் 229 காலதாமதமாகிவிடவில்லை. உங்களிடம் ஆள்பலம் ஏராள மாக இருக்கிறது. எங்கள் நாட்டைவிட உங்கள் நாட்டில் மக்கள் அடர்த்தியாக வாழ்கிரு.ர்கள். எங்களைப் போல் நீங்களும் கடுமையாக உழைத்து, உணவு நெருக்கடியை நீங்களாகவே ஏன் தீர்த்துக்கொள்ளக் கூடாது?’ என்று ஒரு நீண்ட சொற்பொழிவையே ஆற்றிவிட்டார். அவரு டைய சொற்கள் என்னுள்ளத்தில் ஈட்டிபோல் தைத்தன. இறுதியாக அவர் கேட்ட கேள்வி என் உள்ளதைக் கொக்கி போல் சுண்டி இழுத்தது. மேலும் அவர் பிற நாட்டைப் பற்றி எந்த அளவுக்கு அளந்து, அறிந்து வைத்திருக்கிருரி என்ற வியப்பு கேலிட சிந்த ைவசப்பட்டேன். இந்தியர் கண் அனைவரும் சிந்திக்க வேண்டிய வினவல்லவா இது? அன்று நண்பகல். உணவு விடுதி (Cafeteria) ஒன்றில் நான் பகலுணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு அமெரிக்க இளைஞர்கள் என்னிடம் ஒடோடியும் வந்து, நீங்கள் இந்தியாவிலிருந்துதானே வந்திருக்கிறீர்கள்?' (Are you from India?) srow of 3 oil-room. **** என்றதும், இந்தியாவில் உணவுப் பஞ்சதாமே? மக்கனெல் லோரும் வீதிகளில் உணவில்லாமல் வாடிவதங்கிக் கிடக் கிரு.ர்களாமே? என்று கேட்டனர். அவ்விருவரில் மிகவும் இ:ளஞராக இருந்த ஒருவர். உங்கள் நாட்டில் பசுக்கள் அதிகமாமே? அவைகளைக் கும் பிடுகிறீர்களாமே! அவ்வாறு செய்வது தவறு! அவற்றைக் கொன்று இறைச்சியைத்தின்ருல் உங்கள் நாட்டு உணவுப் பஞ்சம் தீர்ந்துவிடுமே?’ என்ருர். அவரிடம் நான் அமைதியாக, "நீங்கள் கூறுவதுபோல் எங்கள் நாட்டில் உணவுப் பஞ்சம் கிடையாது. ஆளுல் பற்ருக்குறை உண்டு. அதையும், உங்கள் நாட்டிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களின் துனே கொண்டு நீக்கிக் கொள்கிருேம். வேறு சில நட்பு நாடுகளும் உங்களைப் போன்று எங்களுக்கு உதவி புரிகின்றன. மக்கள் உணவில் லாமல் செத்து மடிகின்ற அளவுக்கு எங்கள் நாட்டில் உணவுப் பஞ்சம் என்றுமே ஏற்பட்டதில்லை. தவருன