உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயான அனுபவங்கள் 2. As சென்று இனிய உணவைப் பெற்று உண்டு மகிழ்ந்தேன். நான் சத்தச் சைவளுக விளங்கியதைப் பேராசிரியரும் அவ ரது மனைவியும் போற்ருத நாட்களே இல்லை. இதற்கிடை யில், டாக்டர். வாஸ்பர் அவர்களும் நான் நடுப்பகலில் பொறிஇயல் பகுதி நூலகத்தில் உணவு சமைத்துச் சாப்பிடு வதற்குரிய வசதியைச் செய்து தந்தார்கள். அங்கிருந்த மின்சார அடுப்பை ஒருமணி நேரத்திற்குப் பயன்படுத்து வதற்கான அனுமதியை வழங்கியதோடு சோற்றை ஆக்கு வதற்குரிய காற்றழுத்த ஏனத்தையும் (Pressure Cooker) கரண்டிகளேயும் வேறு சில ஏனங்களையும் அவர்களுடைய வீட்டிலிருந்தே கொண்டுவந்து கொடுத்து உதவிஞர்கள். சில நாட்களில் சாம்பாரின் இனியமனம் அந்த அறை முழு வதும் பரவியபோது, அந்த மணத்திளுல் கவரப்பட்ட மாணவ மாணவியர் அங்குவந்து என்கினச் சூழ்ந்து கோண்டு "ஆகா! உங்கள் இந்தியக் கறி எங்களுக்கு மிகவும் பிடிக் கிறது. எவ்வனவு சுவையாக இருக்கிறது!’ என்று ஆளுக்கு ஆள் பாராட்டுரை கூறிஞர்கள். நான் சமைத்த உணவை பல நாட்கள் அவர்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்து மகிழ்ந் தேன். மாலையும் மகிழ்ச்சியும்! கடைசி தாளன்று லாஸ் ஏஞ்சல்சில் நடந்த பிரிவு விழாக் கூட்டத்தில் தான் பேசி முடித்ததும், சென்னையில் எனக்கு நண்பர்கள் அளித்த ஜரிகை மாலைகளைப் பேராசிரி யர் லுபெட்ஸ்கி, டாக்டர். வாஸ்பர், பேராசியர் பவல் (Powell) ஆகிய மூவருக்கும் அணிவித்தேன். அதுகால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மாலைகளை அணிந்து கொண்டு அவர்கள் ஆடியும் பாடியும் குதித்தும் மகிழ்ந்தனர். நான் அளித்த பரிசு சிறியதாக இருந்தாலும் அதனை அவர்கள் பெரிதாகப் பாராட்டி மதித்தனர். இது அமெரிக்கரிடம் காணப்படுகின்ற சிறந்த பண்புகளில் ஒன்ருகும்.