பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多晶G நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் கூட்டம் முடிந்ததும் மாலையைக் கழற்றி அம்மூவரும் கைகோர்த்தவாறு கட்டிடத்திற்கு வெளியே வந்து நின்று எல்லா மாணவர்களையும் பேராசிரியர்களையும் அழைத்து, "பாருங்கள், பாருங்கள்! இந்தியாவிலிருந்து எங்களுக்கு வந்திருக்கும் அற்புதமான பரிசைப் பாருங்கள்! எவ்வளவு அழகான பரிசு, பார்த்தீர்களா?' என்று கூறிப் பரவச மடைந்தார்கள். மேலும், அம்மாலையில் கண்ட வேலேப் பாடுகளையும் பெரிதும் பாராட்டியதோடு அதனை என்வாறு செய்கிரு.ர்கள் என்பதையும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அடுத்து பெர்க்கிளே என்னுமிடத்திற்கு வந்து சேர்த் தேன்.இங்கு விளங்குகின்ற கலிபோர்னியா பல்கலைக்கழகம் பழமைச் சிறப்புடையதாகும். இங்கிருக்கின்ற நூலகப் பணிப் பள்ளி அளவில் பெரியது. பேராசிரியர்களனைவரும் கற்றுத் துறைபோய நல்லறிஞர்களேயாவர். இப்பள்ளி யின் தலைவராகப் பணிபுரியும் டாக்டர். சுவாங் (Swank) என்ற பெரியாரும் இப்பள்ளியில் பணியாற்றும் பேராசி ரியை பூஜே (Fuje) அவர்களும் என்னிடம் காட்டிய பரி வும் அன்பும் என்றும் என் மனதில் பசுமையாக்க் காட்சி யளிக்கின்றன. திருமதி. பூஜே. அம்மையார் ஒரு சிறந்த ஆசிரியராவார்கள். அவர்களது நெடிதுயர்ந்த உயரம், கம்பீரமான குரல், கண்ணில் காணும் கருணை, பேச்சு வன்மை ஆகியன யாரையும் எளிதில் கவர்ந்துவிடும். அவ் வம்மையார் இங்கிலாந்திலிருந்து அமெக்காவில் குடியேறிய ஆங்கிலப் பெண்மணி ஆவார். ஒரு நாள் அவர்களுடைய வகுப்பிற்குச் சென்று இந்திய நாட்டில் பொது நூலக வளர்ச்சி' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த் தினேன். நான் வேகமாக, சரளமாக, தடைபடாது ஆங் கிலம் பேசுவதைக் கண்ட அவர்கள் இடையில் எழுந் திருந்து, சிறிது வேகத்தைக் குறைத்துக் கொண்டால் நல்லது. என்னுல் நன்கு புரிந்துகொள்ள முடியும்' என்று வெளிப்படையாகக் கூறிஞர்கள். பின்னர் வகுப்பு முடிந்த