பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயான அனுபவங்கள் - 217 தும் என்னிடம் வந்து மலர்ந்த முகத்துடன். நீங்கள் இங்கிலாந்துக்குச் சென்று படித்தீர்களா?' என்று கேட் டார்கள். அத்துடன் நில்லாது, அங்கு உள்ளவர்களும் அங்கு சென்று படித்வர்களுந்தான் இல்வாறு ஆங்கிலத்தில் பேச இயலும்' என்று கூறினர்கள். அவர்களது தாய் நாட்டுப் பற்றையும் தாய் மொழிப் பற்றையும் எண்ணி நான் வியந்தேன். தான் சிரித்துக்கொண்டே, நாங்க ளெல்லோரும் இந்தியப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட் டம் பெற்றவர்கள் எனினும், ஆங்கிலேயரை விட ஆங்கில மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் சிறந்த இந்கியர் கள். சிறப்பாகத் தமிழர்கள் பலர் எங்கள் நாட்டில் இருக் கின்ருர்கள். இதற்குக் காரணம், ஆங்கிலேயர் ஆட்சியிலே பல ஆண்டுகள் எங்கள் நாடு இருந்தமையாகும்' என்று கூறினேன். மேலும், "எங்கள் மாநிலத்திலே பேராசிரியர் சீனுவாச சாஸ்திரியார் என்ற ஒரு தலை சிறந்த பெரியார் இருந்தார். அவர் இங்கிலாந்திற்கு அரசாங்க அழைப்பின் பேரில் சென்றிருந்தபோது அவரது சொற்பொழிவுகளை ஆங்கிலேய மக்கள்-அதாவது உங்கள் நாட்டு மக்கள்-கட் டணம் செலுத்திச் சீட்டுப் பெற்றுச் சென்று கேட்டு மகிழ்ந் தனர்' என்றும் நான் தெரிவித்தேன். இதைக் கேட்ட அவ்வம்மையார் மூன்று தடவை, 'உண்மையாகவா? உண்மையாகவா? உண்மையாகவா?" (Reallyl Really!! Really111) என்று வியப்புடன் கேட்டார்கள். பின்னர் அவ்ம்ைமையார் ஐந்து நாட்கள் தனது வகுப்புகளை எனக் குத் தந்து நூற்பட்டியியல் பற்றிச் சொற்பொழிவாற்றச் செய்தார்கள். என்னேப் பாராட்டிப் பல விருந்துகள் நடத் திஞர்கள். தான் எழுதிய நூற்களையெல்லாம் அன்புடன் தந்தார்கள். நூற்பட்டியியல் வளர்ச்சிபற்றி இருவரும் பல நாட்கள் உரையாடிளுேம். அதன் வளர்ச்சிக்குரிய சில திட்டங்களையும் தீட்டினேம். நான் அங்கிருந்து புறப்பட்ட போது அவர்கள் மிகவும் வருந்தி' மீண்டும்.எங்கன் நாட்டுக்கு வரவேண்டும்' என்று விரும்பி வேண்டினர்கள். அவர்கள்