பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயான அனுபவங்கள் 2.59 ஊறுகாய்க்கு ஓடினேன்! நான் பெர்க்கிளேயில் இருந்த பொழுது சில இந்திய நண்பர்களைக் காணுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் என்னே அவர்களுடைய இல்லங்களுக்கு அழைத் துச் சென்று அளவளாவி விருந்தும் படைத்தனர். ஒரு நாள் ஒரு நண்பர் எனக்குப் பிடித்தமான மாங்காய். எலுமிச்சங்காய் ஊறுகாய்களை உணவோடு படைத்தார். அதைக் கண்டதும் சொல்ல முடியாத பேரின் பத்தைப் பெற்றேன். காரத்தையே பல நாட்கள் கண்டறியாத நாககு அதனைச் சுவைக்கத் துடித்தது. நண்பரிடம் 'எல் வாறு ஊறுகாய் கிடைத்தது?" எனக்கேட்டேன். அவர் ஒரு தெருவின் பெயரைக்கூறி, அங்கு ஒரு கடை இருக்கின் றது. அங்கு பெரும்பாலும் இந்தியர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சிம்ப் பாகப் பரோடா மாங்காய் ஊறுகாயும் ஏனைய ஊறுகாய் வகைகளும் அங்கு கிடைக்கின்றன" என்று கூறிஞர். நான் நண்பரிடம் விடை பெற்றுக்கொண்டு ஒரே ஒட்டமாக அந்த விதிக்குச் சென்று, கடையைக் கண்டுபிடித்து, இரண்டு சிறிய ஊறுகாய்ப் புட்டிகளை வாங்கி வந்தேன். இரண்டு வாரங்களுக்கு அவற்றை வைத்துக் கொள்ள வேண்டுமென எண்ணினேன். ஆளுல், அதைக்கு வந்ததும் இரண்டு புட்டி ஊறுகாய்களையும் ஒரே மூச்சில் காலி செய்துவிட்டு மூன்று குவளை தண்ணீர் பருகினேன். மனதில் பெரிய நிம்மதி தோன்றியது. தமிழ் நாட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. சொதியோ சொதி! பெர்க்கலேயிலும் சான்பிரான்சிஸ்கோவிலும் தங்கி யிருந்த பொழுது, அங்கு மிகுதியாகத் தேங்காய்ப் பால் மலிவாகக் கிடைப்பதைக் கண்டேன். உடனே தமிழ் நாட்டுச் சுவையான கறி வகைகளில் ஒன்ருன சொதி யினைச் செய்து நுகர வேண்டுமென்ற ஆவல் எழுந்தது.