பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் அருகில் இருக்கிருர்! ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தபொழுது, முதியோாை இகளயோர்தான் எங்கள் நாட்டில் பாதுகாக்க வேண்டும். உங்கள் நாட்டில் ஏன் அவ்வாறில்லை?” என்று அவ்வில்லத் தலைவரிடம் வினவினேன் அவர் சிரித்துக்கொண்டே, "அவர்களே எங்கள் அரசாங்கம் கவனித்துக் கொள்கிறது’ என்று கூறிவிட்டு, "எங்களது பெற்ருேர்கள் எங்களுட னேயே இருப்பதாக நாங்கள் நினைக்கின் ருேம்' என்று கூறி, தொலைபேசி மூலம் 2000 மைல்களுக்கு அப்பாலிருந்த தனது தந்தையை ஒரு நிமிட நேரத்தில் அழைத்துப் பேசிக் காட்டிவிட்டு தந்தை அருகில்தான் இருக்கின்ருர்!’ என்று கூறிச் சிரித்தார். மேலும், "எங்கள் பெற்ருேர்களை நாங்கள் பார்க்க விரும் பிளுல் சில மணி நேரத்தில் விமானத் தில் பறந்து சென்று பார்த்துவிட்டு வந்து விடுவோம்’ என்றும் கூறினர். அமெரிக்கர்களுக்கு இடம் விட்டு இடம் பெயரும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது. வாழ்க்கையை எந்த இடத்தில் நல்ல முறையில் அமைத்துக்கொள்ள முடியுமோ, அதாவது எங்கு நிறைந்த செல்வத்தை ஈட்ட முடியுமோ அங்கு சென்று வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் செல்லும் பொழுது துாரத்தைப் பற்றி எண்ணுவதில்லை. உறவினர்களைப் பிரிந்து செல்கிருேமே என்று வருந்துவது மில்லை. பெற்ருேரும் தங்கள் பிள்ளைகள் தங்களை விட்டுப் பிரிந்து செல்கிருர்களே என்று எண்ணிக் கொஞ்சங்கூட வருந்துவதில்லை. மாரு க,வயதுவந்த குழந்தை கள் வீட்டை விட்டு வெளியே சென்று, தாங்களாகவே வாழ்க்கைக்கு வழி வகுத்துக்கொள்ள வேண்டுமென்றே விரும்புகிரு.ர்கள். அதனை ஊக்குவிக்கவும் செய்கின்றனர். எனவே, அமெரிக்க இளஞ்சந்ததியினரில் பெரும்பாலோர் 16 வயதை எட்டியதும் வீட்டை விட்டு வெளியே சென்று ஏதாவது ஒரு அலுவலில் அமர்த்து கொண்டு தங்கள் படிப்