பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயாண அனுபவங்கள் 345 பையும் கவனித்துக் கொள்கிள்றனர். இது அவர்களிடம் காணப்படும் மிகச் சிறந்த பண்பாகும். ஆனல், அவர்கள் எங்கிருந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயமாகப் பெற்ருேர்களைச் சென்று பார்த்து வரவேண்டும் என்பதைக் கடைப் பிடித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, பெற்றேர்களிருக்கு மிடத்துக்குப் புதல்வர்கள் தங்கள் குடும்பத்தோடு சென்று சிலநாட்கள் தங்கி அவர்களது ஆசியைப் பெற்றுத் திரும்பு கின்றனர். தலைப்பாகை எங்கே? சில முக்கிய நகரங்களில் வாழ்கின்ற குறிப்பிட்ட சிலர் தான் நமது நாட்டைப்பற்றி நன்கறிந்திருக்கின்ருர்கள் எனலாம். பலர் என்னேக் கேட்ட கேள்விகள் விந்தையாக இருந்தன. “உங்கள் நாட்டில் மகாராஜக்கள்தானே இருக்கிருர் களாம்? அவர்களுக்குப் பெரிய தலைப்பாகை உண்டே, நீங் கள் ஏன் அணியவில்லை?" " உங்கள் நாட்டில் வீதியில் புலி வருமாமே? உங்களுக் குப் பயமில்லையா?* 'குடிசை என்பது எப்படியிருக்கும்? உங்கள் நாட்டு மக்களில் பெரும்பாலோர் அதில்தானே வசிக்கிருர் களாம்!' " வீதியில் பாம்புகள் எவ்வாறு நடமாடுகின்றன? பாம்பு பிடிப்பவர்களது உருவப் படம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது! உங்களுக்குப் பாம்பு பிடிக்கத் தெரியுமா? “உங்கள் நாட்டில் நிறைய யானைகள் இருக்கக் காரண மென்ன?' இத்தகைய கேள்விகளை, மாணவ, மாணவியரும் பொதுமக்களில் ஒரு சிலரும் கேட்டனர். நமது நாட்டின்