பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵ fና நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் - - _ ஐரோப்பாவிலும், மற்ற மேலே நாடுகளிலுமிருந்துதான் அதிகமானவர்கள் இங்குவந்து குடியேறினர்கள் என்பதை மேற்கூறிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆசிய நாடு களிலிருந்தும் இங்கு ஒரளவுக்கு மக்கள் வந்து குடியேறிஞர் கள். இப்படியாக, 1930-இல் அமெரிக்க மக்களில் குறைந் தது 10% பேர் அயல் நாடுகளில் பிறந்தவர்களாக இருந்தார் கள். எனவே, அமெரிக்க மக்களே எந்த ஒரு தனிப்பட்ட தொல்குடி மரபின் வழி வந்தவர்கள் என்று திட்டவட்டமாகக் கூறுவது இயலாத காரியமாகவே இருந்து வருகிறது. பிரிட்டிசு சாயல் அமெரிக்காவை ஆங்கிலோ-சாக்சன் நாடு' என்றே: அழைக்கலாம் எனச் சிலர் கருதுகிரு.ர்கள். அமெரிக்க மக்களில் பிரிட்டிசார் தனிப்பெரும் இனமாக இருந்த போதிலும், பல்வேறு நாடுகளையும் பலதிறப்பட்ட இனங் களையும் சேர்ந்த மக்களின் கலப்புத்திருமணங்களிளுல் உருவானதுதான் இன்றைய அமெரிக்கக் சமுதாயம் என்பதை மனதிற் கொள்வோமாளுல் அமெரிக்காவை * ஆங்கிலோ-சாக்சன் நாடு' என அழைப்பது எத்தனை பொருத்தமற்றது என்பது தெளிவாகும். ஆயினும் பண் பாடு, நிறுவனங்கள் (institutions) ஆகியவற்றைப் பொருத்த, மட்டில் இந்நாட்டை ஆங்கிலோ-சாக்சன் நாடு' என ஒரளவுக்கு அழைக்காலம். சமூக இயல் அறிஞரான வில் எர்பெர்க் (Will Herberg) என்பவர், 'நமது (அமெரிக்கர்) பண்பாடு முழுவடிவம் பெற்றது கொதிகலனிைல் (Melling pot) அன்று உருமாற்றுக் கல னில்தான் (Transmuting pot). இந்த உருமாற்றுக்களிைல் தான் நமது பண்பாட்டு சமயக் கூறுகள் அனைத்தும் ஒருங் கிணைந்து இரண்டறக் கலந்து ஆங்கிலோ-சாக்சன் சாயலு டன் முழுவடிவம் பெற்று வெளிவந்திருக்கிறது. நம்முடைய பண்பாட்டு உறவுகள் பிரிட்டிசு மரபுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கின்றன. எனினும், அமெரிக்காவில் குடி