பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. முப்பால் உயர்ந்த மக்கள் ፰ I முடி மக்களின் தீர்ப்புத் தெரிந்ததும் வெற்றி வீரரைத் தொ/bறேைர போற்றிப்புகழ்வதும் அமெரிக்கருக்கே உரித் காண சிறப்பான பண்பு' _ளன்று குறிப்பிட்டிருந்தார். மேற்கூறிய கருத்தை மெய்ப் பிக்க இதைவிடத் தக்க சான்று வேறு வேண்டுமா? நேர்மையான போட்டி விதிமுறைகளுக்கு முரணுகச் செல்லாமல், தீவிரமான போட்டா போட்டியில் இறங்குவ தில் அமெரிக்க வணிக சமுதாயத்தினரும் சிறிதும் சளேத்தவர்கள் அல்லர். நாட் டி. பொருளாதாரம் சீராகவும் செம்மையாகவும் துரித மாகவும் முன்னேறுவதற்கு வணிகர்களிடையே நிலவும் நேர்மையான போட்டியுணர்வு பேருதவியாக இருக்கின் யது. வணிகத்துறையில் இந்தப் பந்தயம், அரசாங்கத்தின் தஃலயிடின்றி நடைபெறவேண்டுமென அமெரிக்க வணிகர் கள் விரும்புகிழர்கள். ஆனல் அரசினர் இதிலிருந்து ஒரே படியாக விலகி இருக்க வேண்டுமெனவும் அவர்கள் கூற வில்லை. இப்போட்டிக்கான சீரிய விதிமுறைகளை வகுக்க அம். அந்த விதிமுறைகளே மீறுபவர்களைத் தட்டிக் கேட்டு நேரிய வழியில் செலுத்தவும் அரசாங்கம் உதவ வேண்டும்; ஆளுல் தவிர்க்கமுடியாத நிலை ஏற்பட்டாலின்றி, இப் போட்டியில் அரசாங்கமும் நேரடியாக இறங்கிவிடக் கூடாது; சுருங்கச் சொன்னல், பந்தயத்தில் நடுவரைப் போல் அரசாங்கம் பணியாற்ற வேண்டுமேயன்றி எந்தக் கட்சியிலும் சேர்ந்துவிடக் கூடாது என்பது அவர்கள் rண்ணம். க தந்திர உணர்வு அமெரிக்கரும் பிரிட்டிசாரும் பேசும் மொழி ஒன்று பாண். கனி மனித உரிமைகளைக் காப்பதிலும், சட்ட ஆட்வியை (Rttle of law) மதிப்பதிலும் இருவரும் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்பதும் உண்மைதான்.