பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் _ களிடம் காணமுடியாத பண்பு. விளையாட்டில் மட்டுமின்றி வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலுமே இப்பண்பை அவர்கள் வெளிப்படுத்துகிரு.ர்கள். வெற்றி - தோல்வியைச் ச ரி சமமாகக் கருதும் அமெரிக்க மக்களின் அரிய பண்பு என்னை மிகவும் கவர்ந் தது. விளையாட்டிலாகட்டும். வேலையிலாகட்டும், விளை பாட்டின் விதிமுறையினையே (Rule of game) அமெரிக்கர் கள் கடைப்பிடிக்கிருர்கள். அதாவது எதிராளிக்கும் நியாய மான வாய்ப்பை வழங்குகிருர்கள். ஒரு போட்டியில் அமெரிக்கர் தோற்ருல் தோல்வியை அவர் பெருந்தன்மை யுடன் ஏற்றுக் கொள்கிருர் தோற்கடித்தவர் மீது அவர் கடுகளவும் பகைமை பாராட்டுவதில்லை. மாருக வெற்றி விரரைக் கட்டித் தழுவிப் பாராட்டுகிருர் அவருக்கு ஈடாக நன்கு விளையாடியதற்காகத் தன்னைத்தா னே பாராட்டி ஆறுதலடைகிருர் தேர்தல்களைப் பாருங்கள்! தேர்தலின்போது வேட்பாளர்கள் கடுமையாகப் போட்டி யிடுகிருர்கள். ஒருவரை யொருவர் த க்கு வ ைத யு. ம், வாக்குவாதம் புரிவதையும் வசைமாரி பொழிவதையும் காணும்போது எலி-பூனைச் சண்டை கூடக் கெட்டது கேடு என்று எண்ணத் தோன்றும். ஆல்ை, தேர்தல் முடிந்த வுடன், வெற்றிபெற்றவரை நேரில் சந்தித்து அவரை வாயாரப் புகழ்ந்து பாராட்டி வாழ்த்துக்கூறும் முதல் ஆளாக அவரை எதிர்த்துப் போட்டியிட்டவரே நிற்பார். இத்தகைய உயர்ந்த பண்பு மற்ற நாட்டவரிடம் இல்லாம வில்லை. ஆனால், அமெரிக்கரிடம் இது உயர்தனிப்பண் பாகச் செழித்தோங்கி இருக்கிறது. 1952-இல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் தோல்வியுற்ற அட்லாய் ஸ்டீவன்சன், வெற்றி கண்ட ஐசனேவரைப் பாராட்டி வெளியிட்ட அறிக்கையில், i கதேர்தலுக்கு முன்பு கடுமையாகப் போட்டியிடுவது அமெரிக்கரின் பரம்பரைப் பண்பு; அதேபோல், தேர்தல்