உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - - - நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் இருந்தது. * பிறர் தலையீடின்றி ஆண்டவனுடன் மனித மனச்சாட்சி நேரடியாக உறவாடவேண்டும்' என்ற சமயக் கொள்கையில் நம்பிக்கையுடைய புராடஸ்டண்டுகள் "தனித்துவம் வளர உதவியது இயற்கையே. இன மைத் துடிப்பு சில முக்கியமான பண்புகள், பிரிட்டிசாருக்கும் அமெரிக்கருக்குமிடையே பொதுவானதாக அமைந்திருப் பினும், பிற பண்புகளைப் பொறுத்த வரையில் இரு நாட்டு மக்களும் வெகு தொலைவில் தனித்தே நிற்கிருர்கள். பண் பாட்டில் அமெரிக்கரும் பிரிட்டிசாரும் வேறுபட்டவர் களே' என்று ஹங்கேரியப் பிரயாணிகளான பிரான்சிசும் (Francis) GAFyrrrr ..., si sivstuqub (Theresa Pulszky) o no யுள்ளனர். இருபதாம் நூற்ருண்டின் மத்தியில் அமெரிக்க - பிரிட்டிசு பண்பாடுகளே ஒப்பிட்டுநோக்கி இவர்கள் கறி யுள்ள் கருத்து வருமாறு : "ஆங்கிலேயன் தன்னைப் பற்றிப் பெரிதாக எண்ணு கின்ருன் பிற நாட்டவர் தன்னை நேசிக்கிரு.ர்களா, வெறுக்கிா ரிகளா என்பதைப் பற்றி அவன் கவலைப்படுவ தில்லை. எல்லோரும் தன்னை மதித்து நடக்க வேண்டுமென அவன் விரும்புகிருன் தன்னுடைய சொந்தப்பழக்க வழக் கங்கள். பண்பாடு, வாழ்க்கை முறை, சிந்தனைப் போக்கு ஆகியவற்றுடன் ஆங்கிலேயன் என்றும் ஒட்டிக்கொண் டிருக்கின்ருன். பழைமையை விரும்பும் மிதவாதியாக (Cor:erative) தனித்து வாழவே அவன் ஆசைப்படு கின்ருன் அவனது தன்னம்பிக்கை மலையினும் மானப் பெரிது. அதை யாராலும் அசைக்க முடியாது. தன்னைப் பிறர் ஏளனமாகப் பேசுவது கண்டு ஆங்கிலேயன் சிறிதும் கவலை கொள்வதில்லே. மாருக அவர்களுடன் சேர்ந்து தானும் வாய் விட்டுச் சிரித்து மகிழ்வான். மொத்தத்தில் ஆங்கிலேயனின் நடவடிக்கையில் வயதின் முதிர்ச்சியைக் காணலாம்.