பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岳0 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் 4. அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகியவை தொடர்பான சிக்கல்களை ஆக்கமுறையில் அணுகும் அரிய பண்பு. 5. சமஉரிமை வழங்குவதில் ஆர்வம்: கடும் உழைப்பில் ஈடுபாடு; சாதனையின் சின்னமாகப் பணத்தை மதிக்கும் மனப் பாங்கு. 5. சமூக உறவுகளில் பாகுபாடு-ஏற்றத் தாழ்வு கருதாமல் எல்லோருடனும் கூச்சமின்றித் தாராள மாகப் பழகிக் கூடிவாழும் குண இயல்பு. 7. நேரடி அனுபவத்தின் மூலம் இலட்சக்கணக் கான அமெரிக்கர்களின் வா ழ் க் ைக த் தரத்தை உயர்த்துவதற்குப் பாடுபடுவதிலும், கடுமையான உழைப்பிலும் உற்சாகமும் மகிழ்ச்சியும் கொள்ளும் உயர்ந்த பண்பு.