பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பால் உயர்ந்த மக்கள் 보) __ மேன்மேலும் வேகமாகச் செயலாற்ற முனைகிருன். இவ் விகம் அவனுடைய உழைப்புப் பெருகும்பொழுது நாட்டின் பொருளாதாரமும் துரிதமாகப் பெருகுகிறது. உழைப்பிலும் பொருளிட்டுவதிலும் அமெரிக்கன் அதி கக் கவனம் செலுத்திலுைம், வாழ்க்கையை அனுபவிப்பதி தும் அவனுக்கு நிகர் அவனே. அமெரிக்கர்கள், மற்றவர் களுடன் தாராளமாகப் பழகுகிருர்கள்: மனந்திறந்து பேசுகிருர்கள்: நட்புக்கொள்ளுகிரு.ர்கள். நண்பர்களுடன் சேர்ந்து உண்ணுகிருர்கள்; குடிக்கிரு.ர்கள்: உல்லாசமாக வாழ்கிறர்கள். சமய இன, நிற, வர்க்கபேதம் எதையும் பாராமல் எல்லோருடனும் அமெரிக்கன் கலந்துறவாடு விருன். அவனது வாழ்க்கை முறையானது இறுக்கமான கட்டுப்பாடுகளின்றி வளைந்து கொடுக்கும் தன்மையுடைய தாக இருப்பதால், கூடிவாழும் உணர்வு அவனுக்குப் பீறிட் டெழுகிறது. அரசாங்கமும், தேவாலயமும் ஒன்றின் பணி யில் ஒன்று தலையிடாமல் தனித்தனியே இயங்கி வருவதால் பல்வேறு சமயக் குழுக்கள் தொல்லையின்றிச் சுதந்திரமாக வாழமுடிகிறது. பொருளாதாரத்தில் அரசாங்கத் தலையீடு மிகவும் அரிதாக இருப்பதன் காரணமாக, வணிகர்களும், தொழிலாளர்களும், மற்றத் தொழில் நிறுவனங்களும் கதந்திரமாக இயங்க முடிகிறது. அமெரிக்க மக்களின் பண் பைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானல் ஏழு அம்சங் களாகக் கூறலாம்; 1. பலதிறப்பட்ட சமயங்களையும் இனங்களையும் சகித்துக்கொள்ளும் பரந்த மனப்பண்பு. 2. அரசியலமைப்பின்கீழ் அமைந்த அரசாங்கத் கிலும், சட்ட ஆட்சியிலும், தனிமனித உரிமைப் பாது காப்பிலும் அசையாத நம்பிக்கை. 3. புராடஸ்டண்டுச் சமய மரபினடிப் பிறந்த தன் முயற்சி, தற்சார்பு, சுதந்திரத் தொழிற் சாதனை சுள் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை. Jist-4