உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. குழந்தை நூலகங்கள அமெரிக்காவில் பொதுநூலகப் பணியின் மிகச் சிறப்பான, இன்றியமையாத அங்கமாக விளங்குபவை. குழந்தை நூலகங்கள். நாட்டின் எதிர்காலக் குடிமக்களை உருவாக்கும் அரும் பணியில் நூலகங்களின் பங்கு முக்கியமா னது என்பதை நன்கு உணர்ந்த அமெரிக்கர் நாடெங்கிலும் குழந்தைகளுக்கெனத் தனி நூலகங்கள் அமைத்திருக்கிருர் கள். பொது நூலகங்களிலும் சரி, பள்ளி நூலகங்களிலும் சரி, குழந்தைகளுக்காகத் தனிப் பிரிவுகள் இயங்கி வருகின் றன. குழந்தை நூலகங்களுக்கான அலுவலர்களும் இதற் கெனத் தனித் திறமையும் சிறப்புப் பயிற்சியும் பெற்றவர்க ளாக இருக்கிரு.ர்கள். இந்நாட்டில் பொதுநூலகங்கள் எவ்விதம் அமைந் திருக்கவேண்டும் என்பதைப் பொது நூலகத்தர நிர்ணயக் குழு' திட்டவட்டமாக வரையறுத்திருக்கிறது. இந்தத் தரங்களை (Standards) அமெரிக்க நூலகக் கழகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இக்குழு பரிந்துரை செய்துள்ள தரங் களின் அடிப்படையிலேயே நாடெங்கிலுமுள்ள பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

  • 6-6.65 அன்று மேலக்கருவேலங்குளம் நடராசர் இளைஞர் கழகத்தின் சார்பில் நடந்த வரவேற்பின்பொழுது ஆற்றிய உரை.