பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை நூலகங்கள் 67 குழந்தை நூலகங்களின் தரத்தை நிர்ணயிப்பதற்காக 1981-ஆம் ஆண்டில் நிபுணர் குழு ஒன்றை அமெரிக்க நூலகக் கழகம் நியமித்தது. இக்குழுவில், குழந்தை நூலக நிபுணர்களே பெரும்பாலும் உறுப்பினர்களாக இடம் பெற் முர்கள். குழந்தை நூலகப் பணியின் பல்வேறு பிரிவுகளில், நிபுணர்களாக உள்ள பலருடன் தொடர்பு கொண்டு, அவர் களின் அரிய ஆலோசனைகளைக் கேட்டறிந்து, குழந்தை நூலகங்கள் எவ்விதம் அமையவேண்டும் என்பது குறித்துத் தனது பரிந்துரையை இக்குழு 1964-இல் தெரிவித்தது. இந்தக் குழுவின் பரிந்துரையை அமெரிக்க நூலகக் கழகம் அப்படியே ஏற்றுக் கொண்டது. ". பொதுநூலகப் பணித் தர நிர்ணயத்தின் அடிப்படைத் தன்மை, குறிக்கோள் ஆகியவற்றைப் பின்பற்றியதாகவே குழந்தை நூலகத்தர நிர்ணயமும் அமைந்துள்ளது. எ னினும், குழந்தைகளின் தனித் தேவைகள், அவர்களின் மனப்போக்கு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நூலகத் தில் மேற்கொள்ள வேண்டிய தனி வசதிகள், மற்ற ஏற்பாடு கள் பற்றி இந்தக் குழுவினர் முக்கியமாக ஆலோசனைகள் கூறி இருக்கிரு.ர்கள். குழந்தை நூலகங்கள் எவ்விதக் குறிக் கோள்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்? நிர்வாக அமைப்பு எப்படி அமையவேண்டும்? அலுவலர்களே எந்தத் தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்கவேண்டும் ? குழந்தை நூலகங்களின் பணிகள் என் னென்ன ? எவ்வகையான நூல்களை, சாதனங்களைத் தேர்ந் தெடுக்கவேண்டும் ? குழந்தைகளுக்கென நூலகத்தில் என் னென்ன தனி வசதிகள் செய்யவேண்டும் ? என்பவைபற்றி இந்தக் குழு திட்டவட்டமாக நிர்ணயித்திருக்கிறது. குறிக்கோள் குழந்தைகளுக்கான பொதுநூலகப் பணி, ஆறு குறிக் 0мпиlго Атд. கொண்டது. அவையாவன: