பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 8 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் 1. எளிதில் கிடைக்கக் கூடிய விதவிதமான நூல்களைப் பெரும் அளவில் சேகரிப்பது. 2. படிப்பதற்கு ஏற்ற நூல்களைத் தேர்ந்தெடுப்ப தற்குக் குழந்தைகளுக்கு வழி காட்டுவது. 3. சொந்த முயற்சியாலும், சுய ஆர்வத்தாலும் நூல் களைப் படித்து இன்பங் காணும் நற்பழக்கத்தைக் குழந்தைகளிடம் வளர்ப்பது. 4. பொதுநூலகங்களின் உதவி கொண்டு, ஆயுள் முழுவதும் கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் தணியாத ஆர்வத்தை இளம் உள்ளங்களில் ஏற் படுத்துவது. 5. தனது சொந்தத் திறமையை முழு அளவில் வளர்க் கவும், தன்னைச் சுற்றியுள்ள சமுதாயச் சூழ் நிலையை அறிந்து கொள்ளவும் குழந்தைகளுக்கு உதவுதல். 6. குழந்தைகளின் நலம் பேணும் பணியில் ஈடுபட் டுள்ள பிற நிறுவனங்களுடன் ஒத்துழைத்துச் சமு தாயத்திற்கு அருந்தொண்டு புரியும் வலிமை வாய்ந்த சமூகச் சக்தியாக விளங்குவது. இத்தனை குறிக்கோள்களும் ஈடேற வேண்டுமெனில், குழந்தைகள் நூலகப் பணிக்காக, தேசிய, மாநில, உள்ளூர் மட்டங்கள் அனைத்திலும் பொதுநூலக வல்லுநர்களின் சேவை இன்றியமையாது தேவைப்படுகிறது. பொதுநூலகப் பணியில்ை, குழந்தைகளுக்கு ஏற்படும் அளவற்ற பயன்களை நூலக அலுவலர்கள், நிர்வாகத்தினர், சமுதாய மக்கள் எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். இதை உணர்ந்து கொண்டால், கல்வித் துறையிலும், சமூக . வாழ்விலும் குழந்தைகளே நன்னெறியில் செலுத்தி, நற்குடி மக்களாக வளர்ப்பதற்கு நூலகங்கள் எந்த அளவு உறு துணையாக இருக்கின்றன என்பது தெளிவாகும்.