உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நூலக நாட்டில் நூற்றிருபது தாட்கள் துச் சென்று படிப்பதற்கு நிபந்தன்ை ஏதுமின்றிக் கடளுக இந் நூலகங்கள் வழங்குகின்றன. குழந்தைகள், நூலகத் திற்கு நேரில் வந்து நூல்களைப் படிக்கவும், தேர்ந்தெடுக்க வும் வசதியாக நூலகங்களின் அலுவல் நேரம் அமைந் துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், தங்கள் ஒய்வு நேரத்தை நூலகத்தில் கழிக்கும் வகையில் நூலக அலுவல் நேரம் அை மந்துள்ளது. ஒவ்வொரு நூலகத்திலும் குழந்தைகளுக்குத் தனித் தனியாகவோ அல்லது குழாமாகவோ நூல்களை வாசித்துக் காட்டுவதற்குத் தனி அலுவலர்கள் இருக்கிருர்கள். குழந்தை நூலகத்தின் ஒரு பகுதியில் இது போன்ற 'வாசிப்பு வகுப்புக்கள்' நாள்தோறும் நடப்பதைக் கான லாம். இந்த வகுப்புக்களில் குழந்தைகளுக்குத் தொடர் கதைகள், சிறுகதைகள், நாட்டுத் தலைவர்களின் வீர வர லாறுகள் ஆகியவற்றை அலுவலர் ஒருவர் தேவையான இடங்களில் தகுந்த விளக்கங்களுடன் வாசித்துக் காட்டு கிருர். இதன் மூலம், இத்தகைய நூல்களை மேன்மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுகிருர்கள். குழந்தை நூலகப் பணியிலேயே மிகச் சிறப்பான அம்சம் இது எனக் கூறலாம். கதை சொல்லுதல், உரக்க வாசிக்கக் கற்பித்தல், நூல் களைப் பற்றி விமர்சன விவாதங்களுக்கு ஏற்பாடு செய்தல், கண்காட்சிகள் நடத்துதல், விடுமுறை நாட்களில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துதல், படக்காட்சிகள் நடத்துதல், வாஞெலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும், இச்சாதனங்களைப் பயன்தரும் முறையில் பயன்படுத்தவும் போதித்தல் ஆகிய நூலகத் தொடர்புடைய வேறு பல பணிகளையும் குழந்தை நூலகங்கள் செய்து வருகின்றன. இப் பணிகள் மூலம் முழு அளவுப் பயன் ஏற்படும் வகையில் ஆழ்ந்து சிந்தித்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்