பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுந்தை நூலகங்கள் 7 5 டறிந்து. முன் கூட்டியே தக்க முறையில் விளம்பரங்கள் செய்து இந்த நிகழ்ச்கிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகளின் நலன் பேணுவதற்காக இயங்கி வரும் மற்ற நிறுவனங்கள் அனைத்துடனும் நெருக்கமான தொடர்பு கொண்டு ஒவ்வொரு குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் குழந்தை நூலகங்கள் பணியாற்றுகின்றன. ஏராளமான மாணவர் களும், ஆசிரியர்களும் பள்ளி நூலகங்களையும் பொதுநூல சங்களையும் முக்கியமாகப் பயன்படுத்திக் கொள்கிருர்கள். ஆகவே, நூலகத் துறையின் மற்றப் பிரிவுகளின் ஒத்துழைப் பைப் பெறுவதில் குழந்தை நூலகப் பணியாளர்கள் தனி முயற்சி எடுக்கிரு.ர்கள். எல்லாப் பிரிவுகளும் ஒன்றுக்கு ஒன்று உதவிகரமாக இருக்கும் வகையில் உருவான கூட்டுத் திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்துகிரு.ர்கள். ஆால் தேர்வு சமுதாயத்தின் எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லா வயதுப் பிரிவைச் சேர்ந்த சிறுவர், சிறுமியருக்கும் ஏற்ற விதவிதமான நூல்களை ஏராளமான அளவில் தேர்ந்தெடுப் பதில் குழந்தை நூலகங்கள் தனிக் கவனம் செலுத்துகின் றன. குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வத்தைத் துாண்ட வும், அறிவைப் பெருக்கவும், அதே சமயத்தில் மகிழ்ச்சி யாகப் பொழுது போக்கவும் உதவுகின்ற வகை வகையான யூ ல்கள் சேகரிக்கப்படுகின்றன. வெவ்வேறு திறமை கொண்ட குழந்தைகளுக்கு அவரவர்களின் விருப்பத்திற்கு எற்ற நூல்கள் வாங்கப்படுகின்றன. நூல்கள் தவிர, குழந்தைகளுக்குச் சுவையூட்டும் துண்டுப் பிரசுரங்கள், கதிரிகைகள், படங்கள், பூகோளப் படங்கள், பதிவுச் சான் றுகள் (Recordings), திரைப்படங்கள், ஸ்லைடுகள் முதலியவற்றையும் வாங்கி நூலகத்தில் சேகரிக்கிருர்கள்.